இடுகைகள்

நவம்பர், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

*காருகுறிச்சி அருணாசலம்* அவர்களின் வாழ்க்கை வரலாறு

படம்
காருகுறிச்சி அருணாசலம் குஅழகிரிசாமி எழுதிய  இக்கட்டுரை 10.12.2000 அன்று ஆண்டில் தினமணிக் கதிர் இதழில் வெளியானது. சங்கீதச் சக்கரவர்த்தி திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளையின் மறைவுக்குப் பிறகு காலியாயிருந்த நாகஸ்வர சிம்மாசனத்தில் அமர்ந்து ஆட்சி செய்தவர் அவரது சீடர் அமரர் காருகுறிச்சி அருணாசலம். ராஜரத்தினம் மறைந்த இழப்பைக் காருகுறிச்சிதான் ஈடு செய்தார். சினிமா ரசிகர்களுக்குக் ‘கொஞ்சும் சலங்கை’யில் ‘சிங்காரவேலனே தேவா…’ பாட்டில் அவர் வாசித்த வாசிப்பு மறந்திருக்காது. கர்நாடக சங்கீத ரசிகர்களுக்கோ நாகஸ்வரத்தில் அவர் பிடித்த கொஞ்சலும் குழைவுமான ஒவ்வொரு பிடியும் நினைவில் மதுரமாகத் தேங்கிக் கிடக்கும். அவரது மறைவுக்கு ஒரு வாரம் கழித்து அந்த இசை மேதைக்கு எழுத்தால் அஞ்சலி செலுத்தினார் இலக்கிய மேதை கு. அழகிரிசாமி. காருகுறிச்சியின் நெருங்கிய நண்பர் அவர். அஞ்சலிக் கட்டுரை ‘நவசக்தி’யில் 1964, ஏப்ரல் 14ஆம் தேதி வந்தது. கு அழகிரிசாமியின் கட்டுரைத் தொகுப்பை வெளியிட்ட தேன்மழை பதிப்பகத்தார் அத்தொகுப்பில் இதை மறுபிரசுரம் செய்தனர். இசை ரசிகர்களின் பார்வைக்கு இதை முன்வைக்கிறோம். கடந்த பத்து ஆண்டுகளாகச் சங்கீ