இடுகைகள்

ஜூலை, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வர்ணம் அதன் விளக்கங்கள்

படம்
    வர்ணம் வர்ணம் கற்றுக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் வர்ணம் ஆரம் இசை பயிற்சிக்கு என்று உள்ள இசை வகைகளில் மிகவும் முக்கியமானது இந்த வர்ணம். இராகங்களின் தனிப்பட்ட தன்மையை காட்டும் இனிமையான சுர கோர்வைகளையும் சிறப்பு அம்சங்களையும் இந்த வர்ணங்களில் காணலாம். குரலிசையாளர்களும், கருவியிசையாளர்களும், இந்த வர்ணங்களை நன்கு பயிற்சி செய்வதால் கீர்த்தனை போன்ற இசை வகைகளை அழகுடனும், கமகத்துடன், பாடுவதற்கும், இசைப்பதற்கும் ஆற்றல் ஏற்படுகிறது. வர்ணங்களில் சாகித்யம் குறைவாகவே இருக்கும். இது பக்தியை அல்லது காதலை வெளிப்படுத்தும் சொற்களை கொண்டிருக்கும். அல்லது இசையாளர்களை ஆதரித்த பெரியோர்களைப் பற்றி இருக்கும். வர்ணம் பயிற்சிக்குரிய இசை வடிவங்களில் கடைசியாகவும் அரங்கிற்கு உரிய இசை வடிவங்களில் முதலாவதாகவும் உள்ளது. வர்ணத்தின் பகுதிகள் 1). பல்லவி,  2). அனுபல்லவி,  3). முத்தாயி ஸ்வரம், 4). சரணம்,  5). சரண சுரங்கள். சரணத்திற்கு உப பல்லவி, எத்துக்கடை பல்லவி, சிட்டை பல்லவி என்ற வேறு பெயர்களும் உண்டு. சரண ஸ்வரங்களுக்கு  எத்துக்கடை ஸ்வரங்கள், சிட்டைஸ்வரங்கள் என்ற வேறு பெய

ஸ்வரஜதி, ஜதிஸ்வரம் விளக்கம்

படம்
ஸ்வரஜதி பயிற்சி இசை வடிவத்தில் ஆரம்பத்தில் கீதங்களை கற்றபின் ஸ்வரஜதி என்ற இசை வடிவத்தை கற்பது வழக்கம்.  வர்ணங்களை கற்பதற்கு இந்த  ஸ்வரஜதிகள்  வழிகாட்டியாக உள்ளன.    ஸ்வரஜதிக்குப்  பல்லவி, அனுபல்லவி, சரணம்  என்று பகுப்புகள் உண்டு.  பல சரணங்களை உடைய  இசை வடிவங்களில்  ஸ்வரஜதியும்  ஒன்று.   சில ஸ்வர ஜதிகளில்  அனுபல்லவி இல்லாமலும் இருக்கும். (எடுத்துக்காட்டு) பைரவி ராகத்தில் உள்ள “ காமாட்சி” என்று  தொடங்கும்  ஸ்வரஜதி. ஸ்வரஜதிகளின் சாகித்யம்  பக்தி, காதல், வீரம் முதலிய உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதாக அமைந்து இருக்கும்.   ஸ்வரஜதிகள் பொதுவாக பயிற்சிக்கான இசை வகையைச் சேர்ந்தவை. எனினும் சியாமா சாஸ்திரி இயற்றியுள்ள மூன்று ஸ்வரஜதி களும் ( பைரவி  தோடி எதுகுல காம்போஜி) அரங்கிசைக்கு ஏற்றவை. வேறுசில ஸ்வரஜதிகள்  நாட்டியத்திற்குப்  பயன்படுபவை ( எடுத்துக்காட்டு)  உசேனி ராகத்தில் “ஏமாயலாடிரா” என்ற ஸ்வரஜதி. ஸ்வரஜதிகளை  இயற்றியுள்ள சில இசைப் புலவர்கள் 1). சியாமா சாஸ்திரி  2). சோபனா திரி 3). சின்னி கிருஷ்ண தாசர்  4).சுவாதித் திருநாள் 5).

கீதம் என்றால் என்ன ? விரிவான விளக்கம்

படம்
கீதம் பொதுவாக கீதம் என்ற சொல்லுக்கு "இசைப்பாட்டு" என்று பொருள்.  ஆனால் இன்றைய கர்நாடக இசையில் 'கீதம்' என்பது இசை வடிவங்களில் எளிமையான ஒரு வகையைக் குறிக்கும். கீதம் என்ற இசை வடிவத்தில் பல்லவி, அனுபல்லவி, சரணம், என்ற பாகுபாடு கிடையாது. ஆனால் தாளத்துக்கு ஏற்றவாறு சுமார் 10 அல்லது 12 ஆவர்த்தங்கள் கூட இதில் காணப்படும்.  கீதத்தை ஆரம்பம் முதல் முடிவு வரை தொடர்ச்சியாக பாடவேண்டும். கீதத்தில் சங்கதிகள் இருக்காது சுரத்தின் போக்கு ஒரே சீராக இருக்கும் ஒவ்வொரு ஸ்வரத்துக்கும் ஓரெழுத்து தான் இருக்கும். பொதுவாக கீதங்களில் காணப்படும் சாகித்யம் இறைவனை பற்றியதாக இருக்கும். கீதம் பயிலும் மாணவ மாணவியரின் குரலுக்கு பயிற்சி அளிக்கும் நோக்கத்துடன் சில கீதங்களில் மந்த்ர ஸ்தாயி பகுதியிலும்  தார ஸ்தாயி பகுதியிலும் சஞ்சாரங்கள் காணப்படுகின்றன. அலங்காரங்களுக்கு பின்னர் இந்த கீதங்கள் கற்றுத்தரப்படுகின்றன. தமிழிலும், தெலுங்கிலும், கன்னடத்திலும், வடமொழியிலும், பல கீதங்கள் இயற்றப்பட்டுள்ளன. கீதங்களை இயற்றியுள்ள இசைப்புலவர்களில் சிலர்   1)புரந்தரதாசர் , 2)ப