தெய்வீகக் கலைகள்
மனிதன் தன்னுடைய வாழ்க்கைக்கு உறுதுணை செய்யும் பல வகையான தொழில்களை நாம் கலைகள் என்று கூறுகின்றோம்.
ஆகவே கலைகள் என்பது நமது உள்ளத்தில் உணர்வுகளை எழுப்பி இன்பம், மனநிறைவு, கற்பனைவளம், போன்றவற்றை தருகின்றது.
ஆய கலைகள் 64 என்பர்.
கலைகளின் தன்மையைப் பொறுத்து சிலவற்றை லலித கலைகள் என்றும் மற்றவை பொதுவான கலைகள் என்றும் தொகுத்துள்ளனர்.
இவற்றில் மிக முக்கியமானதாக சில கலைகளை மட்டும் கவின் கலைகள், நுண்கலைகள், இன் கலைகள், நன் கலைகள் என்று பெருமை படுத்துகின்றோம்.
இவை சங்கீதம், கவிதை, ஓவியம், சித்திரம், சிற்பம் ஆகிய ஐந்து கலைகள் ஆகும்.
கண்களின் வழியாக கருத்தினில் புகுந்து மனதை மகிழ்விப்பது கவின் கலைகள் ஆகும்.
இவை சிற்பம், கட்டடக்கலை, சித்திரம்,) ஓவியம் ஆகியனவாகும்.
நுண்கலை என்பது செவி யினால் கேட்டு மனதிற்கு இன்பம் தருபவை ஆகும்.
இவை இசை, கருவிஇசை, நடனம் போன்றவைகளாகும்.
மற்ற கலைகள் அனைத்தும் உருவாக்கி முடித்த பின்னர்தான் பிறரால் கண்டும் பிறர் சொல்லக் கேட்டும் மகிழத்தக்க கலைகளாகும்.
ஆனால் இசைக் கலையும் நடனக் கலையும் அவை நிகழும் பொழுதே அதை நிகழ்த்துபவருக்கும் ரசிப்போர்க்கும் இன்பம் தரும் அபூர்வ கலைகள் ஆகும்.
மேலும் இறைவனே இசையின் உருவமாக உள்ளான் இசையின் ஒலியே இறைவனின் அழகு உருவமாக உள்ளது
மேலும் கற்றவரும், கல்லாதவரும், செல்வந்தரும், ஏழையும், மிருகங்கள் பறவைகள் முதல் மனிதர்கள் வரை உள்ள எல்லா உயிரினங்களையும் கவரக்கூடியது இசைக் கலையே அதனால் தான் இக்கலை முதன்மை கலையாக உள்ளது.
ஆகவே மனநிறைவு தரக்கூடியதும் அனைத்து உயிர்களையும் மெய்மறக்கச் செய்வதும் ஆகிய இசைக் கலையை ஒரு தெய்வீக கலை என்று போற்றுகின்றோம்.
ஐயா வணக்கம் தாங்கள் எந்த ஊர்? தங்கள் youtube channel comment offline now ( கருத்து தெரிவிக்க முடியவில்லை)
பதிலளிநீக்கு