இசையும் இறைவனும் ஒன்றே

இறைவன் உலகை படைத்தான் அதில் உயிர்களை படைத்தான் அந்த உயிர்களுக்கு உணர்வுகளை கொடுத்தான் குறிப்பாக உலகில் உள்ள அனைத்து மனித குலத்திற்கும் சோகம், சந்தோஷம், பக்தி, விரக்தி, கோபம், காதல், போன்ற உணர்வுகளை கொடுத்தான்.

இந்த உணர்வுகளை நாடு, மொழி, இன, வேறுபாடின்றி அனைவருக்கும் கொடுத்தான் இறைவன்.

அதேபோல இசையானது வேகம் குறைவான இசை சோக உணர்வை வெளிப்படுத்தும்

வேகமான இசை சந்தோஷமான ஒரு உணர்வைத் தரும்.


இப்படித்தான் இந்த இசையானது நாடு, மொழி, இன, வேறுபாடு இன்றி அனைவருக்கும் உணர்ச்சியைத் தரும்.

எப்படி இந்த மனித உணர்வுகளும், சங்கீத உணர்வுகளும் உலகம் முழுவதும் ஒரே போல இருக்கவேண்டும் என்று யார் சொல்லித் தந்தது.

ஆகவே உணர்வுகளைப் படைத்த இறைவன் மனித குலத்திற்கு இசையையும் கொடுத்து உள்ளான்.

ஆகவே இசை இறைவன் இரண்டும் வேறல்ல இரண்டும் ஒன்றே.

அன்பு என்ற உணர்வு இறைவன் என்றால் இனிமையான இசையும் ஒரு இறைவனே.

ஆகையால்தான் இறைவனை வழிபடும் பொழுது நல்ல ஒரு இனிமையான சங்கீதத்தின் துணையோடு இறைவனை நாம் வழிபடுகின்றோம்.

ஒரு நல்ல நறுமணத்தை நாம் நுகரும் பொழுது நமது மனம் அதில் மயங்கும்.

ஒரு துர்மணத்தை நாம் நுகரும் பொழுது நமது மனம் அதை வெறுக்கும்.

அதே போல் தான் நமது மனம் நல்ல இனிமையான சங்கீதத்தை கேட்கும்பொழுது மயங்கும்.

அதேசமயம் இரைச்சலான ஒரு சத்தத்தை கேட்கும் பொழுது நம் மனம் வெறுப்படையும்.

இப்படிப்பட்ட தூய்மையான இசையை நாம் கற்பதினால் மனித குலத்திற்கு அடக்கம், பக்தி, நட்பு, மனதிருப்தி, சாந்தி, இன்பம், அறிவு, புத்திக்கூர்மை, கற்பனை சக்தி, நினைவுத்திறன், நல்லொழுக்கம் முதலியன கிடைக்கும்.
           குருவே துணை


உருவாக்கம் 
ஆ.சங்கரன் நாதஸ்வர ஆசிரியர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

*காருகுறிச்சி அருணாசலம்* அவர்களின் வாழ்க்கை வரலாறு

சீர்காழி முத்துத்தாண்டவர்

வலசி தில்லானா ஸ்வரம் / சாகித்யம் PDF File