வர்ணம் அதன் விளக்கங்கள்
வர்ணம் வர்ணம் கற்றுக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் வர்ணம் ஆரம் இசை பயிற்சிக்கு என்று உள்ள இசை வகைகளில் மிகவும் முக்கியமானது இந்த வர்ணம். இராகங்களின் தனிப்பட்ட தன்மையை காட்டும் இனிமையான சுர கோர்வைகளையும் சிறப்பு அம்சங்களையும் இந்த வர்ணங்களில் காணலாம். குரலிசையாளர்களும், கருவியிசையாளர்களும், இந்த வர்ணங்களை நன்கு பயிற்சி செய்வதால் கீர்த்தனை போன்ற இசை வகைகளை அழகுடனும், கமகத்துடன், பாடுவதற்கும், இசைப்பதற்கும் ஆற்றல் ஏற்படுகிறது. வர்ணங்களில் சாகித்யம் குறைவாகவே இருக்கும். இது பக்தியை அல்லது காதலை வெளிப்படுத்தும் சொற்களை கொண்டிருக்கும். அல்லது இசையாளர்களை ஆதரித்த பெரியோர்களைப் பற்றி இருக்கும். வர்ணம் பயிற்சிக்குரிய இசை வடிவங்களில் கடைசியாகவும் அரங்கிற்கு உரிய இசை வடிவங்களில் முதலாவதாகவும் உள்ளது. வர்ணத்தின் பகுதிகள் 1). பல்லவி, 2). அனுபல்லவி, 3). முத்தாயி ஸ்வரம், 4). சரணம், 5). சரண சுரங்கள். சரணத்திற்கு உப பல்லவி, எத்துக்கடை பல்லவி, சிட்டை பல்லவி என்ற வேறு பெயர்களும் உண்டு. சரண ஸ்வரங்களுக்கு எத்துக்கடை ஸ்வரங்கள், சிட்டைஸ்வரங்கள் என்ற வேறு பெய