ஸ்வரஜதி, ஜதிஸ்வரம் விளக்கம்

ஸ்வரஜதி

பயிற்சி இசை வடிவத்தில் ஆரம்பத்தில்
கீதங்களை கற்றபின் ஸ்வரஜதி என்ற
இசை வடிவத்தை கற்பது வழக்கம். 

வர்ணங்களை கற்பதற்கு
இந்த  ஸ்வரஜதிகள் 
வழிகாட்டியாக உள்ளன.
  
ஸ்வரஜதிக்குப்  பல்லவி, அனுபல்லவி,
சரணம்  என்று பகுப்புகள் உண்டு. 

பல சரணங்களை உடைய 
இசை வடிவங்களில்
 ஸ்வரஜதியும்  ஒன்று.
 
சில ஸ்வர ஜதிகளில்  அனுபல்லவி
இல்லாமலும் இருக்கும்.
(எடுத்துக்காட்டு) பைரவி ராகத்தில் உள்ள
காமாட்சி” என்று  தொடங்கும்  ஸ்வரஜதி.


ஸ்வரஜதிகளின் சாகித்யம்  பக்தி, காதல்,
வீரம் முதலிய உணர்ச்சிகளை
வெளிப்படுத்துவதாக அமைந்து இருக்கும்.
 
ஸ்வரஜதிகள் பொதுவாக பயிற்சிக்கான
இசை வகையைச் சேர்ந்தவை.

எனினும் சியாமா சாஸ்திரி இயற்றியுள்ள
மூன்று ஸ்வரஜதி களும்
( பைரவி  தோடி எதுகுல காம்போஜி)
அரங்கிசைக்கு ஏற்றவை.

வேறுசில ஸ்வரஜதிகள்  நாட்டியத்திற்குப் 
பயன்படுபவை
( எடுத்துக்காட்டு)  உசேனி ராகத்தில்
“ஏமாயலாடிரா” என்ற ஸ்வரஜதி.



ஸ்வரஜதிகளை  இயற்றியுள்ள
சில இசைப் புலவர்கள்


1). சியாமா சாஸ்திரி  2). சோபனா திரி
3). சின்னி கிருஷ்ண தாசர் 
4).சுவாதித் திருநாள்
5). மெலட்டூர் வெங்கடராம சாஸ்திரி 
6). பொன்னையா பிள்ளை 
7). வாலாஜாபேட்டை கிருஷ்ணசுவாமி
பாகவதர்


ஜதி ஸ்வரம் 


இதுவும் பயிற்சி இசை வடிவத்தில் 
ஆரம்பத்தில் கீதங்களுக்குப் பிறகு
கற்றுத்தரப்படும். 

இது   ஸ்வர அமைப்பில் 
ஸ்வரஜதியை ஒத்து இருக்கும். 
இதற்கு சாகித்தியம் கிடையாது. 


இதற்கு ஸ்வர பல்லவி என்று
வேறு ஒரு பெயரும் உண்டு.

 
இது ஜதி கோர்வைகளை கொண்ட
இசை வகை ஆதலால்
இதற்கு ஜதிஸ்வரம்
என்ற பெயர் தரப்பட்டுள்ளது. 

சில  ஜதிஸ்வரங்கள்   சௌக காலத்திலும்,
மத்தியம  காலத்திலும் இயற்றப்பட்டுள்ளன. 

சில ஜதிஸ்வரங்கள்  ராகமாலிகையாக
அமைந்துள்ளன.

சுவாதி திருநாள் மகாராஜாவும்,
பொன்னையா பிள்ளையும் இத்தகைய
ஜதிஸ்வரங்களை இயற்றியுள்ளனர்.
சுவாதித் திருநாள் மகாராஜா 
சியாமா சாஸ்திரிகள் 
தஞ்சை நால்வர்கள் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சீர்காழி முத்துத்தாண்டவர்

*காருகுறிச்சி அருணாசலம்* அவர்களின் வாழ்க்கை வரலாறு

புரந்தர தாஸர்