வர்ணம் அதன் விளக்கங்கள்
வர்ணம்
வர்ணம் கற்றுக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள்
வர்ணம் ஆரம் இசை பயிற்சிக்கு என்று உள்ள இசை வகைகளில் மிகவும் முக்கியமானது இந்த வர்ணம்.
இராகங்களின் தனிப்பட்ட தன்மையை காட்டும் இனிமையான சுர கோர்வைகளையும் சிறப்பு அம்சங்களையும் இந்த வர்ணங்களில் காணலாம்.
குரலிசையாளர்களும், கருவியிசையாளர்களும், இந்த வர்ணங்களை நன்கு பயிற்சி செய்வதால் கீர்த்தனை போன்ற இசை வகைகளை அழகுடனும், கமகத்துடன், பாடுவதற்கும், இசைப்பதற்கும் ஆற்றல் ஏற்படுகிறது.
வர்ணங்களில் சாகித்யம் குறைவாகவே இருக்கும்.
இது பக்தியை அல்லது காதலை வெளிப்படுத்தும் சொற்களை கொண்டிருக்கும்.
அல்லது இசையாளர்களை ஆதரித்த பெரியோர்களைப் பற்றி இருக்கும்.
வர்ணம் பயிற்சிக்குரிய இசை வடிவங்களில் கடைசியாகவும் அரங்கிற்கு உரிய இசை வடிவங்களில் முதலாவதாகவும் உள்ளது.
வர்ணத்தின் பகுதிகள்
1). பல்லவி,
2). அனுபல்லவி,
3). முத்தாயி ஸ்வரம்,
4). சரணம்,
5). சரண சுரங்கள்.
சரணத்திற்கு உப பல்லவி, எத்துக்கடை பல்லவி, சிட்டை பல்லவி என்ற வேறு பெயர்களும் உண்டு.
சரண ஸ்வரங்களுக்கு எத்துக்கடை ஸ்வரங்கள், சிட்டைஸ்வரங்கள் என்ற வேறு பெயர்களும் உண்டு.
பல்லவி, அனுபல்லவி, முக்தாயிஸ்வரம் ஆகிய 3 பகுதிகளுக்கும் சேர்த்து பூர்வாங்கம் என்று பெயர்
சரணம், சரண சுரங்கள் ஆகிய இரண்டு பகுதிகளுக்கும் சேர்த்து உத்தராங்கம் என்று பெயர்.
ஆதி தாள வர்ணங்களில் உள்ள எத்துக்கடை சுரங்களில் ஒரு வரைமுறை நாம் காண்கிறோம்.
முதல் இரண்டு சுரக்கோர்வைகள் ஒவ்வொன்றும் ஓர் ஆவர்த்தனமாகவும்
அதற்குப் பின்னர் வரும் கோர்வை நான்கு ஆவர்த்தனங்களாகவும் இருக்கும்.
சில வர்ணங்களில் தொடர்ந்து மூன்று ஒற்றை ஆவர்த்தன எத்துக்கடை ஸ்வரங்களும் காணப்படுகின்றன.
அபூர்வமாக சில வர்ணங்களின் இறுதியில் மூன்று ஆவர்த்தனங்களுடைய எத்துக்கடை ஸ்வரங்களும் வருகின்றன.
வர்ணங்களின் வகைகள்
1). தானவர்ணம்
2). பதவர்ணம்
3). பதஜதி வர்ணம்
4). ராகமாலிகை வர்ணம்
1). தானவர்ணம்
இது இது தான வகையில் அமைப்பை கொண்டிருக்கும்.
தான வர்ணங்களில் பல்லவி அனுபல்லவி சரணத்திற்கு மட்டும் சாகித்தியம் உண்டு.
தான வர்ணங்களை இரண்டு அல்லது மூன்று காலங்களில் பயிற்சி செய்தால் நல்ல ஸ்வர ஞானமும் தாளப் பிடிப்பும் ஏற்படும்.
தான வர்ணங்கள் ஆதி தாளத்தில் மட்டுமின்றி கண்ட ஜாதி திருபுடை தாளம், சதுர்ஸ்வர ஜாதி அட தாளம்,
கண்ட ஜாதி அட தாளம், மிஸ்ர ஜாதி ஜெம்பை தாளம், போன்ற தாளங்களிலும் இயற்றப்பட்டுள்ளன.
தான வர்ணங்களை அரங்கிசையின் ஆரம்பத்தில் பாடினால் அரங்கிசை களை கட்டும்.
பாடுவோருக்கும், கருவி இசைப்பவருக்கும், இசையைக் கேட்பவருக்கும் நல்ல விறுவிறுப்பும் புத்துணர்ச்சியும் ஏற்படும்.
தானவர்ணம் பாடம் செய்ய இதை கிளிக் செய்யவும்
நின்னுக்கோரி மோகன இராக வர்ணம் பல்லவி | 👉கிளிக்👈 |
நின்னுக்கோரி மோகன இராக வர்ணம் அனுபல்லவி | 👉கிளிக்👈 |
நின்னுக்கோரி மோகன இராக வர்ணம் முக் தாயி சுரம் | 👉கிளிக்👈 |
நின்னுக்கோரி மோகன இராக வர்ணம் சரணம்,சிட்டைஸ்வரம் | 👉கிளிக்👈 |
சுமநீசரஞ்சனி இராக வர்ணம் பல்லவி | 👉கிளிக்👈 |
சுமநீசரஞ்சனி இராக வர்ணம் அனு பல்லவி | 👉கிளிக்👈 |
சுமநீசரஞ்சனி இராக வர்ணம் முக் தாயி சுரம் | 👉கிளிக்👈 |
சுமநீசரஞ்சனி இராக வர்ணம் சரணம்,சிட்டைஸ்வரம் | 👉கிளிக்👈 |
2). பத வர்ணங்கள்
இந்த வகை வர்ணம் நாட்டியத்திற்காக ஏற்பட்டவை
சௌக காலத்தில் அமைக்கப்பட்டிருக்கும்.
சில பத வர்ணங்கள் மத்தியம காலத்தில் அமைந்துள்ளன.
( உதாரணம் )
மனவி சேகொன ராதா - சங்கராபரணம்
பத வர்ணங்களின் ஸ்வர பகுதி ஆடுவதற்குத் தகுந்ததாகவும், சொற் பகுதி அபிநயத்திற்கு ஏற்றதாகவும் இருக்கும்.
பத வர்ணங்களில் ஆரம்பம் முதல் இறுதிவரை சாகித்யம் கொடுக்கப்பட்டிருக்கும்.
பத வர்ணங்கள் ஆதி தாளத்திலும், ரூபக தாளத்திலும் அமைந்துள்ளன.
பத வர்ணங்களுக்கு சௌக வர்ணங்கள் என்றும், ஆட வர்ணங்கள் என்றும், வேறு பெயர்கள் உள்ளன.
3). பத ஜதி வர்ணங்கள்
சில பத வர்ணங்களில் ஜதிகள் காணப்படும் இத்தகைய பத வர்ணங்களுக்கு பதஜதி வர்ணங்கள் என்று பெயர்.
4).இராகமாலிகை வர்ணங்கள்
இந்த வர்ணத்தின் பகுதிகள் வெவ்வேறு இராகங்களில் அமைந்து இருக்கும்.
நவ இராகமாலிகை வர்ணம், கன இராகமாலிகை வர்ணம், தின இராகமாலிகை வர்ணம், முதலியவை இவற்றில் சிறந்தவை.
மேலும் தானவர்ணம் முறையில் அமைந்துள்ள ராகமாலிகை வர்ணங்களும்,
பதவர்ணம் முறையில் அமைந்துள்ள ராகமாலிகை வர்ணங்களும் உள்ளன.
கருத்துகள்
கருத்துரையிடுக