புரந்தர தாஸர்

 


புரந்தர தாஸர் வாழ்க்கை வரலாறு

நமது இந்திய வாழ்க்கையின் முக்கிய அம்சமே பக்தி தான். பக்தி மார்கத்தில் மூழ்கியிருந்த மஹான்கள் ஆசார்யர்கள் போன்றவர்கள் இந்தியா முழுவதும் பரவியிருந்து நமது பக்தி மார்கத்தின் உயர்ந்த நோக்கத்தை ஒவ்வொரு காலகட்டத்தில் வெளிப்படுத்தும் சாட்சிகளாக இருந்து நமது ஸமூகத்திற்கே ஒரு புகழ்மிக்க வடிவத்தைக் கொடுத்தனர். 8 ம் நூற்றாண்டிலிருந்து தென்னிந்தியாவில் சைவர்கள். வீர சைவர்கள், வைஷ்ணவர்கள் போன்ற தெய்வீக மஹான்கள் இருந்திருக்கின்றார்கள்.


கர்நாடகத்தை சேர்ந்த ஹரிதாஸர்கள் என்பவர்கள் பரம்பரையாய் உள்ள ஸந்நியாஸிகளையும் ஆண்டிகளையும் போன்ற ஒரு வகை துறவிகளாவார். இவர்கள் இந்தியாவின் புராணக்கதை, கட்டுக்கதைகள் ஆரம்பித்த காலத்திலிருந்தே ப்ரபலமானவர்கள். " ஹரிதாஸர் " என்பது இரண்டு சொற்களின் கூட்டாகும். ஹரி, தாஸர் என்னும் 2 வார்த்தைகள் இதில் அடங்கி யுள்ளது. இதனுடைய அர்த்தம் "ஹரி என்னும் கடவுளின் நாஸர்" என்பதாகும். " தாஸர்" என்னும் வார்த்தையை திருப்பி படிக்கும் பொழுது "ஸ்தா என்னும் வார்த்தை வருகிறது. இதற்கு "எப்போதும் கடவுளுக்கு ஸேவகம் செய்பவர் '' என்பது பொருள். ஹரிதாஸர்களின் குழு நிரந்தரமாக ஏற்பட்ட பிறகு அவர்கள் " தாஸ கூடர்கள் " என்று அழைக்கப்பட்டனர் ( இதற்கு கடவுளுக்கு ஸேவகம் செய்பவர்களின் ஸகோதரர்கள் என்று பொருள் '')


மஹாராஷ்டிரத்தின் வைகாரிகளைப் போலவும் தமிழ் நாட்டில் ஆழ்வார், நாயன்மார்களைப் போலவும் காநாடகத்தின் முலை, முடுக்குகளிலெல்லாம் பக்தி இசையை பரவச் செய்தவர்கள்  திரிதாளர்கள் லெஷ்ணய பரம்பரையைச் சேர்த் தவர்கள். இவர்கள் விடலர், பண்டரிபுரத்தைச் சேர்த்த பாண்டு ரங்கர் போன்ற கடவுள்களை வழிபாடு செய்பவார்கள். கிருஷ்ணர், விஷ்ணு போன்றவர்களின் தொண்டர்களாவார்கள்.


கடவுள் வழிபாடு மற்றும், கடவுள் நம்பிக்கையும் தான் ஹரிதாஸர்களின் பக்தி மார்க்கத்தில் முக்கியமானவையாகும்.


ஹரிதாஸ கூட்டத்தில் ஒரு மாணவா உறுப்பினராவதற்கு குருவினால் அவனுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு ஹரிதாஸருக்கும், தனித்தனியாக முத்திரைகள் உண்டு. பொதுவாக எலா ஹரிதாஸர்களின் முத்திரைகள் அல்லது அங்கிதம் "விடல" என்னும் வார் ததையால் முடிவதாக இருக்கும். பாண்டுரங்க விடலர் அல்லது பண்டரிபுரத்தைச் சேர்த்த புரந்தர விடல கர்நாடகத்தைச் சேர்ந்த துறவிகளின் (அதற்கு பக்கத் திலுள்ள மஹாராஷ்டிரத்தையும் சேர்த்து) குலதெய்வமாக இருப் பதைக் காண்கிறோம். கன்னட மக்களின் சிறப்பான ப்ரியமான தெய்வமும் இவரே.


கடவுளை நோக்கி சிஷ்யர் தன்னுடைய விருப்பு, வெறுப்பு ளை விட்டு முழுவதும் சரணடைந்து அவருடைய பாதுகாப்பை வேண்டி நிற்பதுதான் பக்தி மார்க்கத்தின் அடிப்படை கருத்தாக உள்ளது. மனிதனின் உணர்ச்சி பூர்வமான வாழ்க்கைக்கு பதிலாக தத்துவ வாழ்க்கையை கொடுக்கும் பொழுது அதனை பக்தி எனகிறோம்.


இந்து சமுதாயத்தின் முக்கியமான ஞானமார்க்கம் கர்ம மார்க்கம் ஆகியவற்றில் ஹரிதாஸர்கள் தூண்டப்படவில்லை. ஹரி நாஸர்கள் ஜீவன்முக்திக்கு, உயர்ந்த மார்க்கமாக பக்தி மார்க் கத்தையே, கருதினார்கள்.


வேத காலத்திலிருந்து ஆசார்யர்கள், காலம் வரை நாம் வாஸுதேவன் க்ருஷ்ணர் அல்லதுருத்ரன்-சிவன்போன் றவர்களைக் கடவுளாகக் கொண்ட பக்தி வழிபாட்டுமுறை படிப்படியாக வளர்ந்து வந்ததைக் காண்கிறோம், வேநகாலத்தில் அக்னி, லாயு' இந்திரன் போன்ற தெய்வங்களின் மேல் வேத ரிஷிகள் பக்தி ஸுரங்களை அருளியதை அறிகிறேம். உபநிஷத்க்களின் காலத்தில் தான் "உபாஸனம்" என்ற வார்த்தையும் சிவன், வாஸுதேவன் போன்ற கடவுள்கள்தாம் உயர்ந்தவர்கள் என்றும் உலகிற்கு சொல்லப்பட்டது. பக்தி தத்துவம் பகவத்கீதையில் நன்கு விளக்கப் பட்டுள்ளது. ஒருவன் ஒரு செடியின் இலையை அல்லது பூவை அல்லதுபழத்தையோ அல்லதுவெறும்ஒருகைதண்ணீரை க்ருஷ்ண னின் பேரால் திவேதனம் செய்தால் அவன் 'மோக்ஷத்தை" அடைகிறான் என்பதை பகவத்கீதை மூலம் அறிகிறோம். வெவ்வேறு ஆசரியார்கள் தங்களுடைய சொந்த மதக்கோட்பாடுகளை கீதை யின் வாயிலாக தெரியப்படுத்த முயற்சித்தனர். ஆனாலும் மக் சுளுக்கு பக்தி வழிபாட்டின் அடிப்படைக் கருத்துக்கள் இவர்கள் பார்வையிலிருந்து தப்பவில்லை. முக்யமாக ஆசார்யர்களின் உபதே சங்களினால் கவரப்பட்டு இந்த ஹரிதாஸர்கள் ஏழை, பணக்காரர் என்ற வித்தியாஸம் பார்க்காமல் ஒவ்வொரு வீட்டு வாயிலின் முன் நின்று பக்திப் பாடல்களை பாடி ஸனாதன இந்துமதத்தை பரப் பினார்கள். தன்னுடைய தீவைத எரித்தான்தத்தின் மூலம் பக்தி வழி பாட்டை சீரியமுறையில் அமைத்த பெருமை நம் நூற்றாண்டில் நோன்றிய மாத்வா சாரியாரையே சேருச் மாத்வ வேதான்கத்தின் ஸாரமே "பக்தியின் மூலம் ஹரியை அடைவது". இந்த பக்திக் கோட்பாடு கடவுளின் உன்னத நிலையையும் தனிப்பட்ட ஜீவன் களின் கீழ் நிலையையும் குறிப்பதே ஆகும். அதாவது சுருக்கமாக கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள வித்தியாஸத்தைக் குறிக்கும். மதவாசாரியர் கடவுளை நோக்கி முழுதும் சரணடைவது என்பது மோஷத்துடன் தொடர்பு கொண்டது என்கிஞர் 'ஹரிதான் முதன்மையான கடவுள்' என்றும் மக்கள் அனைவரும் அவரு டைய கருணையைச் சாரந்திருக்கிறார்கள் என்னும் கூறுகிறர். மத்வரை பொறுத்தவரை ஒவ்வொரு பக்தனும் தன்னை கடவுடவி முழுமையாக அர்பணித்துக் கொள்ள வேண்டும் என் கிருt இக்கருத்து மத்வாசாரியாரின் சிஷ்யர்களால் முழுமையாக பின்பற்றப்பட்டது. மத்வாச்சாரியாரின் மதக்கருத்துக்கள் ஹரிதாஸர்களின் பக்தியினை மேலும் ஊக்குவித்தது. அதனால் தான் மத்வருடைய கருத்தைத் திவிரமாக பின்பற்றினார்கள்.


ஹரிதாஸர்கள் மத்வருடைய தலைதக் கருத்துக்களை தங்களுடைய பாடல்களில் புகுத்தினார்கள், அதன் மூலம் அவர் களால் மத்வருடைய கருத்துக்களை கர்நாடகம் முழுவதும் சிறிதும் கஷ்டமில்லாமல் பரப்ப முடிந்தது. ஹரிதாஸர்கள் அவர்களுடைய குருலைப் போலவே ஹரியின் மீதும், அவருடைய பத்து அவதாரங் களின் மீதும் பச்தர்களாக இருந்தார்கள். அவர்கள் எப்பொழுதும் ஹரியை தங்களுடைய தந்தையாக, தாயாக, சகோதரனாக தங்களுடைய வாழ்க்கையின் அனைத்துமாக நினைத்தார்கள். இருந்தாலும் கடவுளுக்கும் தங்களுக்கும் இடையே ஒரு எல்லை வைத்துக் கொண்டு ஒருவித மரியாதையையும் வைத்திருந்தார்கள். அவர்கள் நாம சங்கீர்த்தனத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்ட வர்களாக இருந்தார்கள். கடவுளுடைய நாமத்தை உச்சரிப்பதின் மூலம் உண்மையான மோக்ஷத்தை அடைந்து விடமுடியும் என்று நம்பினார்கள்.


எண்ணற்ற பலவகையான. பாடல்கள் ஹரிதாஸர்களால் இயற்றப்பட்டுள்ளன. அவர்கள் இயற்றிய ஆயிரக்கணக்கான பாடல்கள் தற்பொழுது நமக்கு கிடைத்துள்ளன. இவைகள் புராணங்களிலிருந்தும், மஹாபாரதத்திலிருந்தும் அனேக கதை களைப் பற்றிய குறிப்புகளை உள்ளடக்கியுள்ளன. வைஷ்ணவ பக் தர்களைப் பற்றியும் தத்துவ ஞானிகளான ப்ருது மஹாராஜா, பலி, சிபி. ப்ரஹ்லாதன், திருவன், கஜேந்திரன், அஜாமிளன் ஆகிய வர்களைப் பற்றியும் குறிப்புகள் உள்ளன. அவர்களுடைய பெரும் பான்மையான பாடல்கள் கிருஷ்ணரையும, ராதையையும் குறித்து அமைந்துள்ளன. மற்றும் பாகவதம், உபநிஷதத்தின் கருத்துக் களும் அடங்கியுள்ளன


ஹரிதாஸர்களின் மூலம் கன்னட மொழி வளர்ந்தது என்று கூறினால் அது மிகையாகாது. கன்னட மொழியை, அவர் களின் தத்துவங்களையும் கருத்துக்களையும் பரப்ப கருவியாய் வைத்துக் கொண்டதால் அவர்களுக்கு மேலும் வரவேற்பு கிடைத்தது என்று கூறலாம். அதற்கு முன்பு வரை ஸம்ஸ்க்குதம் தான் பொது மொழியாக இருந்தது.


ஹரிதாஸர்களில் இரு பிரிவினர் உண்டு. தாஸகூடர்கள் மற்றும் வ்யா ஸகூடர்கள் தாஸரி, வ்யாஸரி போன்ற பதங்கள் புரந்தரதாஸரின் காலத்தில் முதலில் உபயோகப் படுத்தப் பட்டன. புரந்தரதாஸரின் மதகுரு வ்யாஸராயராவார். புரந்தரதாஸரைப் பின்பற்றியவர்கள். "தாஸகூடர்கள்" என்று அழைக்கப்பட்டனர் பின்னால் வ்யாஸகூடருக்கும், தாஸகூடருக்கும் வேறு வேறு அர்த் தங்கள் தோன்றின. வ்யாஸகூடர்கள் என்பவர்கள் ஹரிதாஸரின் ஒரு பிரிவினர் என்றாலும் ஸம்ஸ்க்குத புலமை பெற்றவர்களாவார். அவர்களுடைய தத்துவங்கள் அவர்களுடைய முதல்தரமான அறிவை நமக்கு அறிவிக்கிறது, வேதம் உபநிஷதம், மற்றும் ஆன்மீக தத்துவங்கள் ஆகியவற்றில் ஆழ்ந்த ஞானம் கொண்ட வர்களாதலால் அவர்கள் வேதவ்யாஸ பரம்பரையின் தீவிர தொண்டர்களாக இருந்தார்கள், தாஸகூடர்கள் பின்பற்றியவர்கள் இவைகளில் இருந்த கருத்துக்களை முறைப்படுத்தி அவைகளின் மூலம் வேதவ்யாஸ பரம்பரையின் கருத்துக்களையும், முக்யத்துவத் தினையும் "ப்ரக்குதி கன்னடம்'' அதாவது அந்த பகுதியில் பேசப் படும் கன்னட மொழியின் மூலம் விளக்கினார்கள் தீவைத தத்து வத்தையும் கூறினார்கள்ஸ மஸ்க்ருத பானஷபை அறியாத பாமா ஜனங்களும் இந்த தத்துவத்தின் நீ திக்கருத்தினையும் வேதாந்த்தக் கருத்துக்களையு ஸுலபமாக புரிந்து கொள்ளும் விதத்தில் பாடல் களை ஓ. ற்றியுள்ளார்கள்.


ஹரிதாஸர்கள் இந்து மதத்தின் மகிமையை மேலும் விரிவு படுத்தி பலதரப்பட்ட சமூகத்தினருக்கும் ஜாதியினருக்கும் அதில் நம்பிக்கையை ஊட்டினார்கள் இப்படியாக கர்னாடக தேசத்தில், ஸமுஹத்தில், பலதரப்பட்ட மனிதர்களும், சம அந்தஸ்து உள்ள வர்கள் என்பதை ஹரிதாஸர்கள் வலியுறுத்தினார்கள், உன்னத திலையை அடைய சமூக அந்தஸ்த்தோ, ஜாதி பிரச்சனைளோ ஆண் பெண் பாருபாடோ எதுவும் தேவையில்லை என்று உபதேசம் செய்தார்கள்.


ஹரிதாஸர்கள் தங்களுடைய பாடல்கள் அனைத்திலும் ஒரு நீதிக் கருத்தைப் புகுத்தினார்கள், மேலும் பழமைக் கருத்துக்களில் ஊறியவராக அல்லது மதத்தினை தீவிரமாக நம்புவதாகவோ வேஷம் போடுவதினால் உண்மையான மோத் தை அடையமுடியாது என்பதை தெளிவு படுத்தி உள்ளார்.


ஒவ்வொரு ஹரிதாஸரின் பாடல்களிலிருக்கும் உபதேசங் கள் அனைத்தும் அவரவருடைய சொந்த அனுபவங்கள் ஆகும். ஆனால் ஒவ்வொருவரும் மற்றவருடைய உபதேசத்திலிருந்து வேறுபட்டு இருப்பார்கள். இதற்கு காரணம் ஒரு தாஸருடைய சந்தோஷமோ, துக்கமோ, தோல்வியோ, வெற்றியோ மற்றெருரு வருடையதிலிருந்து வேறுபட்டு இருக்கும். மேலும் ஒவ்வொரு ஹரிதாஸர் பிறந்த சூழ்நிலையும் அவர்கள் சம்ஸாரத்திலிருந்து விடுபட அவர்கள் பட்ட கஷ்டங்களும் வேதணைகளும் நிச்சயம் அவர்களுடைய உபதேசங்களுக்கு ஒரு புது வடிவத்தையும் தனிப்பட்ட தன்மையையும் கொடுக்கும். 'நன்மை நடக்காது' என்ற நம்பிக்கையின் மைக்கு ஹரிநாஸர்கள் இரையாகாமல் இருந்தார்கள். உலகத்தின் இருண்ட துயரமான பகுதிகள் ரிதார்களின் உள்ளத்தைத் தளரச் செய்யவில்லை. அவர்கள் தங்களை ஹரிக்கு முழுவதும் அர்ப்பணம் செய்திருந்தபடியால் அவர்கள் வாழ்க்கையில் நேர்ந்த எதிர்பாராத சோகங்களுக்கு அவர்கள் கவலைப்பட வில்லை. அவர்கள் சம்சாரத்தில் தாங்கள் அனுபவித்த கஷ்டங்களைத்தான் அதிகம் குறிப்பிட்டுள்ளார்கள்.


அவர்களுடைய பாடங்களில் மகிழ்ச்சிகரமான கவிதை தயமும் இசையும் காணப்படும். கர்நாடகம் உலகத்திற்கு அளித் துள்ள மதிப்பிடமுடியாத விஷயங்களில் ஒன்று கடக இசை அல்லதுதக்ஷிணாநிஇசை எனப்படும் இதுடத்தராதி இசையிலிருந்து மாறுபட்டது ஒரு நாட்டின்மக்களின்மனதை அதனுடைய கோயில் களிலிருந்தும், இலக்கியங்களில் இருந்தும், கலைகளிலிருந்தும் அறியலாம் என்று கூறப்படுகிறது இவைகள் அனைத்திற்கும் இத் தியாவில் மதிப்பு தரப்பட்டது. மேலும் இவை அனைத்தும் கட வுளிடமிருந்து தோன்றியவை எனக் கூறப்படுகிறது. கடவுளையே உண்மை, நன்மை, அழகு (சத்தியம், சிவம், சுந்தரம்) என்னும் மூன்றிற்கு அதிபதியாகக் கருதுகிறார்கள். இந்தக் கருத்தைத்தான் மஹான்களும், ரிஷிகளும் சங்கீதமும் ஸாஹித்யமும் சரஸ்வதியின் இரண்டு அங்கங்களாக விவரித்திருக்கிஞர்சன்.


இந்திய இசை பக்தி மார்க்கத்திலிருந்து ஒரு பொழுதும் விலக்கப்பட்டதில்லை. சிறந்த வாக்கேயகாரர்கள் அனைவரும் பகவத்ஸாத்காரம் பெற்ற மஹான்களாகவும் கல்வியில் நிபுணர்களாக இருந்தது மட்டுமல்லாது கடவுள்மீது ஆழ்ந்த காதல் கொண்டவராகவும் இருந்தார்கள். அவர்கள் மற்றைய மஹரிஷிகள் யோகிகளினிடையே சிறந்தவர்களாக இருந்தார்கள். ஏளென்றால் அவர்களுக்கு இசையின் வாயிலாக பக்தியின் மூலம் மோக்ஷத்தை அடையும் வழி தெரிந்திருந்தது. மற்ற எல்லா வழிகளையும் விட, கடவுளை நம்முடைய வாழ்க்கையில் உணரச் செய்ய இசை சக்தி வாய்ந்ததாக இருந்தது இந்த கருத்துதான் மத்வாசரியாராலும் அவருடைய சிஷ்சர்களாலும் பின்பற்றப்பட்டு வந்தது. தீவைத தத்துவத்தையும், ஓ ஆத்ய புனித இசையின் மூலம் கடவுளை அடைய முடியும் என்பதையும் நாபினார்கள். ஹரிதாஸர்கள் இசையையும் கவிதையையும் 'அத்யாத்தம விகாஸத்தை" அடைய உதவும் சாதனங்ளாகக் கருதினார்கள். அவர்கள் இசையின் மூலம் பரமாத்ம வை உணரலாம். ஏனென்றால் 'கடவுள் ஒரு சங்கீதப்ரியர் என்றார்கள்,


"மத்3 பாக்தா யத்ர கராயந்தி தத்ர திஷ்ட 2சமீ" என்று பரமாத்மா, கிருஷ்ணன் கூறுகிறார். பாட்டில் பக்தி அடங்கியுலி வது அதற்கு இசை உயிரூட்டுகிறது இதனாலேயே பாட்டும் இசையும் கடவுளுக்கு மிகவும் பிரியமானவைகள் என்று கூறுப்படுகிறது. ஹரிதாஸர்களைப் பொறுத்தவரை இவை இரண்டும் இரட்டையர் களைப் போல், ஒன்றில்லாமல் மற்றொன்று நீடித்து இருக்க முடியாது என்று கருதினர், ஸ்ரீ பாதராயர் அவருடைய உகர போகம் ஒன்றில்


"க்ருத யுகத்தில் தீயானமும், த்ரேதா யுகத்தில் யாக யக்ஞங்களும், தீவாபர யுகத்தில் கடவுள் வழிபாடும். கலியுகத்தில் கானமும் கேசவனை வழிபடும் முறைகள் "என்று கூறுகிறார்.


கர்நாடகத்தின் பலவிதமான கருத்துக்களையும் இணைக்கும் சக்தி வாய்ந்த சாதனமாக இசை இருந்தது. வேதக்கருத்துக்களையும் உபநிஷதக் கருத்துக்களையும் மக்களுக்கு நன்கு தெரியப்படுத்த ஹரிதாஸர்கள், சுலபமான மாக்கமாக இசையைத்தான் பயன் படுத்தினார்கள். இசை இந்த தத்துவக் கருத்துக்களை பாரப பில் லாமல் கர்நாடகம் முழுவதும் பரப்பியது. கீதம், ப்ரபந்தம் மூலமாகவும், உகாபோகங்களின் மூலமாகவும் இந்தக் கருத்துக்கள் பரப்பப்பட்டன. அவர்கள் நவவிதபக்திகளுள் ஒன்றான கீர்த்தனை வடிவத்தை இறைவனின் உண்மை ஸ்வருபத்தை அறிய எடுத்துக் கொண்டார்கள். தவைத கருத்துக்களையும் க்ருஷ்ணபரமா தீமாவின் அன்பினை விளக்கவும் கீர்த்தனை ரூபம் அவர்களுக்கு மிகவும் பயன் பட்டது.


அவர்கள் காலத்தில் இருந்த மற்றைய ஆசார்ய புருஷர் களைப் போல் இல்லாமல் ஹரிதாஸர்கள் தங்களுடைய பாடல்களை பலவகைகளாக இயற்றினார்கள். அவை பதம், சூளாதி, உகா போகம், தத்வஜாவளிகள் ஸ்லோகம், கந்த வசனம், கதியம், எஸேபத்யம், விருத்தம், தவிபதி, சௌபதி. ஷட்பதி, அஷ்டபதி ரகளை, யாலபதம் முதலானவை.


நமக்கு 200 ஹரிதாஸர்களின் பெயர்கள் கிடைத்துள்ளன. இதில் 8 பேர் பெண்களாவார், பொதுவாக ஹரிதாஹர்களை 8 வகையாக பிரிக்கலாம். 

1) முதல்வகையில் ஹரிதாளாகள் இலக்கியத்திற்கு முக்கியமாக வேலை செய்தார்கள். அவைகளில் பெரும்பாலானவை களில் மத்வர்களைப் பற்றி அதிகம் குறிப்பிடப்பட்டிருக்கும் இந்த கூட்டத்தில் விஜயதாஸர், ஜகன்னாத்தாஸர், வெங்கடேசர் ஆகி. யோர் அடங்குவார்கள்.


2) இதில் முக்கியமாக இந்து காவியங்களின் முக்கிய கருத்துக்கள் அல்லது. ப்ராமணர்களின் சமூகத்தைப் பற்றிய விஷயங்கள் உள்ள இலக்கியமாக இருக்கும். வ்யாஸராயர் கோபால்தாஸர், சுப்பண்ணதாஸர் முதலியவர்கள் இந்த வகையில் அடங்குவார்கள்.


3) எல்லாவித சமூகத்தினருக்கும் பிரிவினருக்கும் பொது வான கருத்துக்களைப் போதித்தவர்கள் அடங்குவார்கள், ஸ்ரீபாத ராயர், புரந்தரதாஸர், கனகதாஸர், வாதிராஜர் ஆகியோர் இந்த வகையைச் சார்ந்தவர்கள்.


ஹரிதாஸர்களில் முதல் முதலானவர் நரஹரி தீர்த்தர் என் பவர். அவருடைய க்ருதிகள் நமக்கு மிகக் குறைவாகவே கிடைத் துள்ளன. புரந்தரதாஸரின் குருவின் குருவான ஸ்ரீபாதராயர்தான் ஹரிதாஸர்களின் உண்மையான ப்ரதிநிதியாகக் கருதப்படுகிறர். ஆனால் இவர்கள் அனைவரிலும் பிரபலமானவர் புரந்தரதாஸர் என் பவர் என்பதை மறுக்க முடியாதது.


பக்தி,கலை, கலாசாரம் ஆகிய மூன்றும் இணைந்த உருவம் தான் புரந்தரதாஸருடையது அவர் கடவுளுக்கு தன்னை அர்ப் பணம் செய்து கொண்ட தியாகம் மிகப்பெரிதானது அவர் பெரும் பணக்காரர் நவகோடி நாராயணன் என்று அழைக்கப்பட்டு வத் தார், கணக்கிலடங்கா சொத்தினை கடவுளுக்கு தொண்டு செய்வ தற்காக தீயாகம் செய்தார். அவர் செய்த தொண்டுகளோ கணக் கிலடங்காது மற்ற எல்லா வாக்கேயகாரர்களும் செய்த முயற்சி யின் பயனை இவருடைய க்ருதிகளுடன் ஒப்பிட்டால் இருவடைய ஒளி துளிக்கு கூட ஸமமாகாது. அவர், மொத்தம் 4, 75,000, உருப்படிகள் செய்தார். ஒவ்வொன்றும் நிறைய சரணங்கள் கொண்டது.


இசைக்கு அவர் செய்த தொண்டுகள் எண்ணிலடங்கா தவை, விலை மதிப்பற்றவை, கர்நாடக இசைக்கு சமமாக மற்றொரு இசை கிடையாது. அப்படிப்பட்ட இசையின் தந்தை என அழைக்கப்படுகிறர். அவருடைய உருப்படிகன், எளிமையான ஸ்வராவளிகலிருந்து ஆரம்பித்து கீதங்கள் விரிவான, கடினமான உருப்படிகளான சூளாதிகள் வரை நீண்டுள்ளன. அவர் ஸாஹித் யங்களின் தாளக்கட்டு, ராகபாவம் ஆகியவை நமது இசையின் பூர்ணதத்துவத்தின் உச்சம் எனக் கூறலாம். அவருடைய ஸாஹித் யங்கள் கவிதை நடையில் அமைந்து வளமான கற்பனையும். வார்த்தைகளையும் கொண்டு வர்ணிக்க இயலாத அளவிற்கு தர மாக இருக்கும். அவருடைய நீதிக் கதைகள், குற்றச்சாட்டாக கூறும் வாக்கியங்கள் எல்லாவற்றிலுமே ஓர் ஆழமும், வடிவமும் இருக்கும். இந்து தர்மத்தின் உண்மைகளை நமக்கு உபதேசித்துக் கூறுவதில் அவருக்கு நிகர் அவரே. அவருடைய குறிப்புக& மிகவும் கவர்ச்சிகரமாகவும் சந்தோஷமான இசை மூலமாகவும் வெளிப்படுத்துகிறார். இந்தியாவிலும் சரி, உலகத்திலேயே கூட புரந்தரதாஸரைப் போல மற்றொருவர் உறவாகவில்லை. அவருக்கு பின்வத்தவர்களைத் தவிர அவருடைய சொந்த குருவான வ்யாஸ ராயரே அவருக்கு மிகப்பெரிய புகழையும் கௌரவத்தையும் கொடுத் லுள்ள திலிருந்து அவருடைய வல்லமை எந்த அளவிற்கு பரவி யுள்ளது என்பதை அறியலாம் அவருக்கு பின்வந்த தாஸர்கள் அவருக்கு குறைவாக ஒன்றும் செய்யவில்லை என்றாலும் அவர்கள் அவரை நாரதரின் மறுவடிவமாகவே கண்டார்கள். மேலும் இவருடைய உருப்படிகள் தான் தியாகராஜருக்கு அவளுடைய கத பனைகளுக்கு வடிவம் கொடுத்தது என்று சொன்றால் அதில் நவறேதுமில்லை. 


த்யாகராஜரின் தாய் புரத்தரதாஸரின் பாடல்களை அடிக்கடி பாடுவார் என்றும் தியாகராஜரின் மனதில் அது நன்கு பதிந்து விட்டாதாகவும் அதுவே அவருடைய பிற்கால இசைக் கவனச்சிறப்பிற்கு அடிப்படையாய் அமைந்தது என்றும் கூறுவார் கள். முத்துஸ்வாமி தீக்ஷிதர் தனக்கென்று ஒரு பாணியை வைத்துக் கொண்டிருந்தலும் அவர் புரந்தரதாஸரின் பாணியை யும் பின்பற்றினார் என்று சொல்லலாம். அவர் சூளாதி ஸப்த தாளங்களையும் அதிகம் உபயோகப்படுத்தி தேவர் நாமாக்களில் மறைந்திருந்த அபூர்வ ஸஞ்சாரங்களுடன் ஒத்திருக்கிறது. அதே போல் க்ஷேத்ரக்ஞரின் சில பதங்களையும் புரந்தரதாஸரின் சில பதங்களையும் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது அவை இரண்டிற்கும் உள்ள நெருங்கிய ஒற்றுமையை அறிகிறோம். புரந்தரதாஸரின் முன்னோடியான ஸ்ரீ வ்யாஸராயர் தன்னுடைய சிஷ்யரான புரந்தா தாஸரின் உயர்வினால் பெரிதும் கவரப்பட்டார் அவர் தன்னுடைய சிஷ்யரைப் பற்றி "தாஸரென்தரே புரந்தரதாஸ ரய்யா'' என்று துவங்கும் கீர்த்தனையில் குறிப்பிட்டுள்ளார். அவர் அக்கீ ர்த்தனையில் யார் தாஸர், யார் தாஸர் இல்லை என்று குறிப்பிட்டு புரந்தரதாஸர் ஒருவர் தான் தாஸர் என்று முடிக்கிறார். புரந்தரதாஸரின் மூத்த சிஷ்யரான விஜயநாஸர் தன்னுடைய 'பந்த துரித விஹசன" என்ற பாடலில் தன்னுடைய குருவைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.



புரந்தரதாஸரின் இயற் பெயர் ஸ்ரீனிவாஸநாயக், அவ .00 வருடங்களுக்கு முன்னர் புனாவிற்கு அருகில் உள்ள ''புரந்தா கட '" என்னும் ஊரில் பிறந்தார் அவருடைய குடும்பம் வைர வியாபாரம் செய்து வந்தது புரந்தரதாஸர் மிகவும் கருமி யாய் இருந்தார். அவருடைய மனைவி மிகவும் தாராளமான மதைப்படைத்தவர்.


ஏழை ப்ராமணர் ஒருவர் தன்னுடைய பேரரின் உப தயனத்திற்காக இவர் மனைவியிடமிருந்து மூக்குத்தியை யாசகம் பெற்றகதை நன்றாக தெரிந்த ஒன்றாகும். அந்த ப்ராமணரின் அதிசயத்தையும் மூக்குத்தி பற்றியும் கேட்ட ஸ்ரீனிவாச நாயக் கிற்கு அதிர்ச்சி ஏற்பட அதன் மூலம் அவர் மனைவியின் பத்தி உணர்ச்சியை அறிந்தார் இது அவருக்குள் ஒரு பெரியமாற்றத்தை ஏற்படுத்தியது திடீரென்று அவருக்கு ஏற்பட்ட இந்த மாற்றத்தில் அதுவரை அவருடைய பக்தி உணர்ச்சியை மறைத்திருந்த அதிசயமான திரை விலகியது. துயரக்கடலில் தாங்கமுடியா மல் மரணவேதனைப்பட்டு அவர் சமசாரம. என்னும் வலையிலிருந்து தப்ப மிகவும் போராடிவென்றார். தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் ஏழை மக்களுக்கு விநியோகம் செய்தார். ஏழை ப்ராமணர் உருவில் வந்து அவருக்கு அன்பு வாழ்க்கையின் உண்மையை எடுத்துச் சொன்னது உலகத் தந்தையான கடவுள் தான் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது. இதற்கு தாஸரின் மனைவியை இறைவன் ஒரு கருவியாக உபயோகித்துள்ளார்.தனக்கு மிகப்பெரிய சக்தியின் ஒரு பிம்பத்தை கடவுள்பற்று, உண்மை, துறவு. மனநிறைவு போன்றவற்றின் மூலம் உலரச் செய்த பெரியவரைக் காணவேண்டும் என்ற அடக்கமுடியாத ஆசையால் தனது மனைவி, குழந்தைகளுடன் "புரந்தரகடவை" விட்டு புரந்தரதாஸர் வெளியேறினார்


முதன்முதலில் அவர் கிருஷ்ண தேவராயரின் ஆட்சியின் கீழ் பாராம்பரிய மதக் கலைகளை வளர்த்து வந்த ஹம்பிக்குத்தான செல்லவேண்டும் என்று திட்டமிட்டிருந்தார். ஆனால் கெடுபிடியான துறவறத்தை மேற்கொள்ள தன்னுடைய அலையும் மனதைக் கட்டுப்படுத்தி தன்னுடைய எண்ணங்களை ஒருவழிப் படுத்து வதற்கு தனக்கு ஒரு குரு தேவை என்று உணர்ந்தார் குருவின் மூலம் முறையான யோகத்தினாலும் மறைந்திருக்கும் உண்மை களைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்து விஜயநகரத் திற்குச் சென்றார். இந்த இடத்தை இவருடைய குருவான வ்யாஸ ராயரைத் தவிர வேறு யாராலும் நிரப்பமுடியவில்லை. புரந்தரதாஸர் அவருடைய முறையான அறிமுகங்களையும் அங்கிதத்தையும் வ்யாஸராயர் மூலம் பெற்றார். பிறகு தானாகவே 'புரந்தரவிடால' என்னும் முத்திரையுடன் அநேக கீர்த்தனைகளை இயற்ற ஆரம்பித் தார், மேலும் வ்யாஸ்ராயர் புரந்தரருக்கு முறைப்படி தர்சனங்கள் வேதங்கள், உபநிஷதங்கள், சாஸ்திரங்கள் ஆகியவற்றைக் சுற்று கொடுத்து கடவுளை அடையும், உணரும் வழியை சுற்றுக் கொடுத் தார் புரந்தரதாஸரும், வ்யாஸராயரும் சேர்ந்ததின் விளைவாக ஒரே மாதிரியான இரண்டு உள்ளங்கள் சேர்ந்த ஒரு புனிததத்வத்தை ஏற்படுத்தியது. மேலும் ஒரு இக்கட்டான நிலையில் இருந்த தென்னிந்தியாவின் சரித்திரத்தைமாற்றி இந்து சமுதாயத்தை மேல் நிலைக்கு கொண்டு வந்து சுற்றியுள்ள விமர்சனங்களிலிருந்தும், முரன்பாடான கருத்துகளிலிருந்தும் விடுபட்டு பக்தியுணர்ச்சியின் மறுமலர்ச்சிக்கு இருவரும் வழிவகுத்தனர்.


புரந்தரதாஸர் தன்னுடைய பணியை ஒரு ஹரிதாஸ ராகவே இருந்து செய்ய விரும்பினார். மேலும் அவர் தன்னுடைய வாழ்க்கையின் மாற்றத்திற்கு காரணமாயிருந்த தன்னுடைய மனைவிக்கு கடமைபட்டவராக இருக்க விரும்பினார் அவருடைய உருப்படிகளில் ஓறான ஆதத்தெல்ல ஒளிதே ஆயிது" வில், அவர் தன்னுடைய வாழ்வின் எழுச்சித்து வெளிச்சம் காட்டிய தன்னுடைய மனைவியை புகழ்கிறா!


ஒவ்வொரு நாளும் வீடு வீடாக சென்று பிக்ஷைக்ஷ எடுத்து குடும்பத்தை நிர்வாசிப்பது புரந்தரரின் தினசரி வாழ்க்கையின ஒரு முக்கிய காரியமாக இருந்தது. இந்த வழக்கத்தைப் பற்றி அவருடைய சில உறப்படிகளில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக் மூலம் அவருக்கு ஏற்பட்ட மற்றங்களைக் குறிப்பிட் டுள்ளார் பணக்காரர்கவீன் தொடர்யல் ஏற்பட்ட குழப்பா. தன்னுடைய சொத்துக்கள் நிறைந்த வாழ்க்கையை விட்டு வெளியில் லர ஏற்பட்ட கஷ்டங்கள், மூட நம்பிக்யிைன் பேரில் அவருக்குள்ள விரோதம், அவரிடமிருந்த ஜாதி விரோதமில்லாத கொள்கையின் பணக்காரர்களுக்கு இருந்த வெறுப்பு, ஜாதி உயர்வு வித்யாசமில்லாத தன்னுடைய பஜனை கோஷ்டி ஆகியவற்றைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

தென்னிந்தியாவின் புனிதமான இடங்களுக்கு புரத்தா தாஸர் யாத்திரை மூலம் சென்றார். அவர் தீர்த்த யாத்திரை மூலமாகவும் க்ஷேக்ஷத்ர யாத்திரை மூலமாகவும் பயணம் செய்து மனிதர்களையும் அவர்கள் வாழும் முறைகளையும் கூர்த்து கவனித் தார். எந்தெந்த இடங்களுக்கு போகிறாரோ அங்கங்கு உள்ள தெய்வங்களின் மேல் பாடல்களை இயற்றினார். அவர் மைசூர், நஞ்சன்கூடு, ஸ்ரீரங்கப்பட்டிணம், மேல்கோட்டை முல்பாகல், காஞ்சீபுரம், திருப்பதி, பண்டரீபுரம் போன்ற இடங் களுக்கு சென்றுள்ளார். மைசூரில் பெட்டத சாமராஜ உடையார் அவரை மிகவும் விசேஷ மரியாதைகளுடன் வரவேற்றார் எனக் கூறப்படுகிறது. இடையில் தன்னுடைய இஷ்டத் தெய்வத்தின் உறைவிடமான பண்டரீபுரத்தில் சில நாள் தங்கினார். அவருடைய உருப்படிகளில் இந்த தெய்வத்தின் மீதுதான் அநேக பாடல்கள் இயற்றியுள்ளார். ஸமயம், சமுதாயம், இசை இலக்கியம் இவை களுக்கு இணையில்லா தொண்டாற்றிய பிறகு வாழ்க்கையை அமைதியாக கழிக்க விரும்பி ஹம்பிக்கு வந்தார் 1654 A.D ரக்தாக்ஷி வருடம் புஷ்ய பஹீள அமாவாசை அன்று கடவுளை மனதிலும் அவருடைய நாமத்தை உதட்டிலும் கொண்டு அவருக்கு தொண்டு செய்ய இவ்வுலகத்தை விட்டு நீங்கினார்.


வடஇந்திய துறவி பாடகர்களுக்கும் புரந்தரதாஸருக்கும் நிறைய ஒற்றுமை உண்டு. துளஸிதாளர் ஸகுண நிலையிலும், கபீர்தாஸ் நிர்குண நிலையிலும் இருந்தார் என்றால் புரந்தரதாஸt ஸகுண நிலையில் ஆரம்பித்து நிர்குண நிலையை அடைந்து பெரிய துறவியாகவும் மாறினார். யோகம், ஞானம், பக்தி இவற்றின் மூலம் நிர்குண பரமாத்மாவின் ஸக்ஷாத்காரத்தை அடைந்தார்.


புரந்தரதாஸர் பக்தியின் உயர்ந்த குணத்தை மிகவும் திறமையான வார்த்தைாளாலும வாக்கியங்களாலும் விளக்குகிறர். நாம் அவருடயை பாடல்களில் தீயஉணம் உள்ளவர்கள் அதை வீட்டுவிடவும் நல்லகுணம் உள்ளவர்கள் மேலும் மேலும் அதனை வளர்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்வதைப் பார்க்கலாம். அநேக நிகழ்கால குறிப்புகள் அவருடைய பாடல்களில் சிதறிக் கிடப்பதைக் காணலாம். நாம் இவ்வுலகத்தில் எவ்வாறு வாழ வேண்டும் என்றும் சக மனிதர்களுடன் எவ்வாறு பழகவேண்டும். என்றும் குறிப்பிடுகிறார்.

நமது இந்து சமயத்தின் நிலையான கொள்கைகளையும் அருமையான கருத்துக்களையும் மக்களுக்கு சொல்ல வேண்டும் என்பது புரந்தரதாஸரின் குறிக்கோள்களில் ஒன்றாகும் அவருடைய பாடல்களில் இல்லாதவை என்றால் அது நமக்கு தேவையில்லா தவை என்று சொன்னால் அது மிகையாகாது. ஸ்ருதி, ஸ்பகுதி பற்றியும் குறிப்பிட்டுள்ளார். மற்ற எல்லா வாக்கேயகாரர்களை விட புரந்தரருக்கு நாம் ஆச்சார்யா அல்லது மனிததத்துவத்தின் ஆசிரியர் என்று அழைக்கக்கூடிய தகுதி உள்ளது அவருடைய சமயமும், இலக்கியங்களும் உலகத்தாரால் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்றாகும். அவருடைய பாடல்களில் பழமொழிகளும், செய்யுட்களும், நீதிக் கதைகளும் நிறைந்திருக்கும். இவைகள் இந்த தீர்க்கதரிசியின் ஜொலிக்கும் எண்ணங்களைக் கொண்டுள்ளது, அவருடைய பாடல்களிலேயே "புரந்தரோபநிஷத்" என்ற தலைப்பின் கீழ் ஒதுக்கக்கூடிய அளவிற்கு தரமான பாடல்கள் உள்ளன. இந்த பாடல்கள் அனைத்தும் அவருடைய சொந்த குருவாலேயே வேதங்களுக்கு சமமாக மதிப் பிடப்பட்டுள்ளது எவ்வாறு உபநிஷதங்கள் சமயத்தின் உண்மை களையும் தத்துவங்களையும் கூறியதோ அதேபோல் புரந்தரதாஸரின் பாடல்களும் உண்மைகளைக் கூறின. கடவுளின் பக்திதான் அவரு டைய பாடல்களின் முக்கிய, கருத்தாக இருந்தாலும் வேதாந்த கருத்துக்களை எவ்வாறு சொன்னார்களோ அதே முறைகளை பாடல் களிலும் பின்பற்றியுள்ளார். எவ்வாறு உபநிஷதத்தில் கடவு ை அடையும் முக்தி நிலையை ப்ரதானமாக கூறப்பட்டுள்ளதோ அதே போல் இவரும் அதனையே முக்கியமாகக் கூறி மதச்சடங்குகளைப் பற்றியும் முதன் மையானதாக மதசார்பான கருத்துக்களை இராண்டாம பக்ஷ்மாகக் கூறியுள்ளார். மேலும் அவர் உவமை, உருவகங்களையும் தனது படுத்தியுள்ளார். பாடல்களில் பரவலாக உபயோகப்


ஆதாரங்களும்,சங்கேதக் குறிப்புகளும் புரந்தரதாஸரின் பாடல்களில் சிதறிக் கிடக்கின்றன ஒரு புராணக்கதையினை சொல் லும் பொழுது இவைகளில் ஒரு பக்கத்துணையாக, த்வைதக் கருத்தினை உபயோகப் படுத்திக் கொள்வாt ஸ்ருதிகள் எவ்வனக்கெவ்வளவு புனித்தன்மை கொண்டுள்ளதோ அதே அளவு பாகவத புராணங்கள் கொண்டுள்ளது இந்த அரங்கத்தி விருந்து தாராளமாக கருத்துக்களை எடுத்துக் கொண்டு அவற்றை மிகவும் அலங்காரமாக தன்னுடைய உபதேசங்களா தன்னுடைய பாடல்களில் கூறியுள்ளார். கிருஷ்ணரின் குழந்தைப்பருவம் புரந்தர தாஸுரூக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, அவர் பாலகிருஷ்ணனின் மீது அநேகபாடல்களை இயற்றி உள்ளார். க்ருஷ்ணபரமாதீமாவீன வரலாறவற சித்தரிக்கும் உணர்ச்சிக்காவியங்கள் அவை


புரந்தரதாஸர், பரமாத்மா க்ருஷ்ணனை பார்த்தது அவருடன் விளையாடியது அவருடைய தொடர்பை அனுபவித்தது இந்த இடையறத்தொடர்பு எப்பொழுதும் வேண்டும் என்று நினைத்து உருகியது, இவை எல்லாம் தன்னுடைய கீர்த்தனங்களில் சித்தரித்துள்ளார். ராதாவின் தெய்வீசுக்காதலி லும் ஒரு புதிய கோணத்தை காட்டியுள்ளார். சித்தரித்துள்ளார் விஷ்ணுவின் பத்து அவதாரங்களைப்பற்றி அவருடைய பாடல்களில் அடிக்கடி குறிப்பிட்டுள்ளார். ''கோகுல தொளகோர்வ" என்ற கீர்த்தனையில் இந்த விவரங்களைக் காணலாம்


புரந்தரதாஸர் இயற்றியுள்ள கீர்த்தனைகளின் எண்ணிக் கையைப் பற்றி நமக்கு சந்தேகமே தேவையில்லை. நமக்கு அவரு டைய சொந்த ஸாஹித்யங்கள் 4, 75,000 பாடல்கள் கிடைத் துள்ளன. ஒவ்வொரு பாடலிலும் பல சரணங்கள் உள்ளன. என்று கூறும் பொழுது மொத்த பாடல்களின் அளவு ஒருவருடைய கற் பனைக்கு எட்டாத அளவில் உள்ளது. இந்த விஷயத்தைப் பொறுத்தவரை மற்ற எந்த வாக்கேயகாரரும புரந்தரதாஸரின் அருகில் நெருங்க முடியாதவர்களாகி விடுகிறார்கள். ஆனால் எல்லா வசக்கேயகாரர்களையும், விட முன்னிலையில் இருக்கும் புரந்தர தாஸர் வேதவ்யாஸருக்கு அடுத்ததாகத்தான் கருதப்படுகிறார். ஆனால் அவனுடைய பாடல்களின் அளவும் அதில் பொதிந்துள்ள கருத்துக்களும் நம்மை பிரமிக்க செய்து விடுகிறது


புரந்தரதாஸரின் பாடங்கள் கீர்த்தனை வகையைச் சேர்ந்தவை அன்னமாச்சாரியரால் கீர்த்தனை வடிவம் வழக்கத் தற்கு வந்தது. தீயாகராஜரின் பாடல்களில் புரந்தரதாஸரின் சாயல் அதிகம் இருக்கிறது இருவருடைய கருத்துக்களும் ஒன்றக இருப்பதைக் காணலாம்.



தியாகராஜர் புரந்தரதாஸரைப் பற்றி தனது பக்தி விஜயத்தில் " கூறுகிறார்.

புரந்தரதாஸர் "த்ரௌபதி வஸ்திராபரணம் " சுதா மாசரிதம்'' ஆகிய இரண்டையும் யக்கான பாணியில் வசனங்களும், உரைநடைகளுமாய் இயற்றியுள்ளார். அவைகளில் ஒன்றுகூட நீடித்து இருக்கவில்லை '"அனுசூயா சரித்திரம்' என்ற மற்றெரு யக்ஷகானம் தற்பொழுது வழக்கத்தில் உள்ளது. அதில் உள்ள பாடல்களின் முடிவில் அவருடைய முத்திரை காணப் படுகிறது.


புரந்தரதாஸர் கர்நாடக இசையின் தந்தை என அழைக் கப்படுகிறார். அவர் லக்ஷியகர்த்தா மட்டுமல்ல, ஒரு சிறந்த லக்ஷணகாரரும் கூட. நாம் தற்பொழுது கடைபிடிக்கும் தென்கை இசை அவர் அளித்துள்ள வரப்ரசாதமாகும். வடநாட்டு பாணி தென்னாட்டு பாணியிலிருந்து பிரிந்து பல நூறு வருடங்கள் ஆகி விட்டன. அடிப்படை இல்லாத காரணத்தால் இரண்டுமே ஒரு தெளிவற்ற முறையில் பல் வருடங்களாக இருந்து வந்தது புரந்தரதாஸரால் தான் கர்நாடக இசைக்கு ஒரு தனித்தன்மை வந்தது. அது வெங்கடமகியால் மேலும் தெளிவாக விரிவாக்கப் பட்டது.


மானவகௌள ராகத்தை அடிப்படை ராகமாகக் கொண்டு வந்ததுதான் புரந்தரதாஸரால் முதன்முதலில் ஏற்படுத்தப்பட்ட பெரிய மாற்றமாகும். பழைய சுத்த ஸ்கேல் கரஹரபிரியா என்று சொல்லப்படுகிறது. அது ஷட்ஜம், பஞ்சமம், மத்யமம் ஆகிய வற்றிற்கு சதுஸ்ருதி இடைவெளி கொடுத்ததின் மூலம் ஏற்பட்டது புரந்தரதாஸர் மாளவகெளை ஸ்கேலை ஆதிகாலத்து ஸ்கேவிற்கு ஒப்பாக அமைத்துள்ளார். ஆனால் சதுஸ்ருதி இடைவெளிக்கு பதில் த்ரிஸ்ருதி உபயோகப்படுத்தப்பட்டது ஒன்று தான் வித்யாஸம், ஆனால் அதுதான் மாளவகெளன ஸ்கேலை உபயோகப் படுத்தியதன் அழகைக் காட்டுகிறது. வெங்கடமகியின் 72 மேளகர்த்தா தோன்றுவதற்கு '"மாளவகொள" தான் அடிப்படை வகுத்தது. மூர்ச்சனை செய்யும் பொழுது மாளவகௌளயின் ரிஷ மூர்ச்சனை ரஸிகப்ரியாவும் மாளவகௌளயின் ப்ரதிமத்யமராகமான பந்துவராளியின் நிஷாத மூர்ச்சனை கனகாங்கியையும் தரு கிறது ஆதி, அந்த்ய மேளங்கள் கிடைத்த பிறகு அதன் பூர் வாங்கத்தையும், உத்ராங்கத்தையும் தனித்தனியாக பிறித்து 72 மேளங்களை தோற்றுவிப்பது வெங்கடமகிக்கு சுலபமாக இருந்தது.


இதனைத் தவிர மாளவகெளள ராகத்தில் அவர் அநேக வரிசைகள் இயற்றியது இன்றும் கூட இசையில் ஆரம்பபாடம் கற்பிக்க உதவுகிறது புரந்தரதாஸரால் வழிவகுத்து கொடுக்கப்பட்ட ஸ்வராவளிகள், ஜண்டை வரிசைகள் 85 தாள அலங்காரங்கள் கீதங்கள் முதலியவைகளை கற்றுக் கொள்வதின் மூலம் சிறப்பான தேர்ச்சி பெற முடியும்.


உருப்படிகளின் எண்ணிக்கையில் புரந்தரதாஸரை மிஞ்ச ஆள் கிடையாது. ஒவ்வொரு உருப்படியும் கச்சிதமாகவும் இசைக்கு உதவும்படியும் இருக்கும். லக்ஷண லக்ஷிய கீதங்கள் இயற்றியதில் சிறந்தவர் எனப்படுகிறார் கீர்த்தனைகளைத் தவிர தானவர்ணங்களை தில்லானாக்களும் இயற்றுவதில் சிறந்தவரான ஆதியப்ப ஐயர் புரந்தரதாஸரைப் பார்த்துதான் தன்னுடைய தானவர்ணங்களை அமைத்தார் என்று சொல்லுவதுண்டு. அவருடைய அநேக கீர்த்தனைகள் மத்யமகாலத்தில் அமைத் துள்ளன. எல்லா வகையான தாளங்களையும் உபயோகப்படுத்தி யுள்ள அதிலும் சாபு. ஜம்பை தாளங்கள் அதிகம் பயன் பட்டுள்ளன. அவருக்கு முந்தைய வாக் ேக யகாரர்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது புரந்தரதாஸர்தான் ஆதிதாளத்தை அதிகமாக பயன்படுத்தியுள்ளார். இந்த வகையில் தீயாகராஜகும் புரந்தரதாஸரும் நெருங்கியவர்களாகிறார்கள் சௌக்கால கீர்த் தனைகள் இயற்றுவதில் சம அளவு புலமை பெற்றிருந்தார். நாயக, நாயகி பாவத்தில் சில பாடல்கள் இயற்றியுள்ளார். ஆனால் மொழியினை வைத்து அது க்ஷேத்ரக்ஞருடையது என்று சொல்கிறார்கள். அது தவறு புரத்தரதாஸரின் பதங்கள்தாம் க்ஷேத்ரக் ஞருக்கு ஒரு முன்மாதிரியாக அமைந்தது. பாவம், ராகம், தாளம் இவற்றை பொறுத்த மட்டில் பத வாக்கேயகாரர்களுக்கு இவரு டைய பதங்கள் முன்மாதிரியாக இருந்தது.


உருப்படி வகைகளிலேயே அவருடைய புலமை முழுவதை யும் வெளிப்படுத்தும் இயல்பு கொண்டது சூளாகிதான் ஹரிதாஸர் களின் பணியிலேயே, அதிலும் புரந்தரதாஸரின் பாணியிலேயே பாதுகாத்து வைத்துக் கொள்ளக் கூடிய அளவிற்கு முக்கியமானது அர்த்தம் இந்த சூளாதிகள், புரந்தரதாஸர் 64,000 சூளாதிகள் இயற்றியுள்ளார். சூளாதி என்ற வார்த்தைக்கு ஸுன, ஹாதி அதாவது ஸுலபமான பாதை என்று சொல்லப்படுகிறது, வாஸீ தேவன நாமாவளிய அறுபத்தத்தில் நால்கு ஸாஸிர என்ற பாடலில் தெரிவிக்கிறார். சூளாதிகள் ஸாலக சூட ப்ரபந்தங்களிலிருந்து, தோன்றியவை எனக் கூறப்படுகிறது. இவற்றில் ராகத்தை விட தாளத்திற்கு முக்கியத்துவம் காணப்படும். நடுவில் கேய ப்ரபந்தங் கள் 3 வகையாக பிரிக்கப்பட்டு இருந்தன: ஸுட, ஆலிக்ரம். விப்ரகீர்ண. இதில் ஸுட ப்ரபந்தம் சுத்த, சாயாலக என 2 வகை யாக பிரிக்கப்பட்டு இருந்தது இதில் சாயாலக பின்னால் ஸாலக் என்று மாறிவிட்டது, ஸாலக சூட ப்ரபந்தங்கள் நிர்யுக்த ப்ரபந்த வரிசைகளைச் சேர்த்தவை. அதிருஷ்ட பலன் கொடுக்கூடிஈவை என்று கருதப்பட்டன அவைகள் ஏழாகும் த்ருவ, மந்த, ப்ரதி மந்சு, நிஸ்ஸாரிக ராஸ, அட்டதாலி, ஏகதாலி. இவைகளில் தனியாக விசேஷ உருப்புகளை செய்து அவைகளை தேசி தானங் களில் பாடப்பட்டு வந்தன. இந்த வழக்கம் தாளங்களைப் பொறுத்த மட்டில் நன்கு வளர்ந்து, அவைகள் சூளாதி தாளங்கள் என்று அழைக்கப்பட்டன. அவைகள் திருவ. மட்ய, ரூபக. ஜம்பை. திரிபுட. கண்ட, ஏக, ஸாலக சூட ப்ரபந்தத்தின் முதல் வகையும் சூளாதி தாளத்தின் முதல் வமையும், திருவ, என்று அமைத்தது கவனிக்கத்தகுந்தது ஸாலகசூட ப்ரபந்தங்கள் முழுவதும் சேர்த்து சூலக்ரம என்று அழைக்கப்பட்டன. சூளாதி என்னும் வார்த்தையே, ஸுட என்பதிலிருந்து தோன்றியதாகும் பின் சூல என்று ஆயிற்று. சூல் என்றால் சப்தம். அல்லது கேட்கப்படுதல். இவைகளில் ஒவ்வொன்றும் தகுந்த முறையில் 7 முறையான சூள தி தாளங்களுள் பாடப்படுவது வழக்கில் இருந்தது. ஸாலக் சூடகங்கள் ஆரம்பிக்கப்பட்ட பொழுது அவைகள் 7 தனித்தனி பகுதிகளாக கருதப்பட்டன. 15ம் நூற்றாண்டிலிருந்து அவைகள் அனைத்தும் ஒரே ப்ரபந்தமாக பாடப்பட்ட நிலை உருவாயிற்று. இதுதான் சூளாதி என அழைக்கப்பட்டது. சூளா தியில் இந்த 7பகுதிகளும் 7சரணங் களாக கருதப்பட்டு ஒவ்வொரு சாணமும் ஒரு சூளாதி நாளத் தால் அமைக்கப்பட்டு பாடப்பட்டன. கர்நாடகத்தின் சூளாதி ஹரிதாஸர்களுக்கு 7 ஸாகலசூட ப்ரபந்தங்களையும் சேர்த்து ஒரே ப்ரபந்தமாக மாற்றிய பெருமையும் உண்டு சூளாதிகள் தற் பொழுதுள்ள நிலையை 15, 16ம் நூற்றாண்டு ஹரிதாஸர்கள் தான் உருவாக்கினார்கள். அவர்களால்தான் சூளாதி என்ற வார்த்தையும் இசை உருப்படியும் நமக்கு அறிமுகமானது. தாஸர் ஸாஹித்யங் கணிலேயே பெருமை பெற்றது சூளாதி கர்நாடக சங்கீதத்தின் ஒரு முக்ய அம்சமாக மாறியது. சூளாதிகள் ஸாலக சூட ப்ரபத்தங்களிலிருந்து தோனறியவை என்று சொல்லும் பொழுது ஹரிதாஸர்கள் அதன் முக்கிய சுருவைத்தான் இதற்கு அடிப்படை யாக எடுத்துக்கொண்டார்கள் ஸாலக சூட ப்ரபந்தங்கள் ப்ரமுகர் களையும், ராஜாக்களையும் பற்றிக் கூறுகிறது. ஆனால் சூளாதிகள் கடவுள் பெருமையும், ஒருவருடைய சமுதாய, நீதி வாழ்க்கை மேம்பாட்டிற்கு வழியும் கூறுகிறது. சூளாதி என்ற வார்த்தை ஸுளு (எளிய ) ஹா தி (வழி) என்ற 2 வார்த்தையினால் உருவானது என்று கூறப்படுகிறது. அதனால்தான் சூளாதியின் முக்ய அமச மான பக்தி, முக்தி அடைய எளிய தருகிறது. வழியை உருவாக்கித் தருகிறது.

ஹரிதாளர்களைத் தவிர அன்னமாச்சாரியா ஷாஜிஹ ராஜா ஆகியோரும் சூளாதிகள் இயற்றியுள்ளனா. துளஜாஜியின் மதிப்பிற்குரிய 'ஸங்கீத ஸாராம்ருதம்" என்ற லக்ஷணக்ரத்தத்தில் சூளாதியைபற்றிக் காணப்படுகிறது அதேபோலசுப்பராமதீ க்ஷிதரின் ஸங்கீத ஸம்ப்ரதாய ப்ரதர்சனியிலும்" காணப்படுகிறது. நமது இசையின் லக்ஷண, லக்ஷியம் இரண்டிற்கு புரந்தரதாஸர்தான் முன்னோடி என்று துளஜாஜி கூறிகிறார். சூளாதியில் பல சீர்சன் (Stanza) இருக்கும். அவற்றின் எண்ணிக்கை ஐந்திலிருந்து 9, 10 வரை இருக்கும். வரிகளின் எண்ணிக்கை குளாதிக்கு சூளாதி மாறுபடுவதுடன் சீருக்கு சீர் மாறுபடும். சூனாதிகளை தாளமாலிகை என்று சொல்லலாம். அவற்றின் நாளங்களில் நன்கு நிர்னாயிக்கப் பட்ட பாரம்பரியத்தைக் காணலாம். சூளாதிகளில் 5 தாளங்களி லிருந்து 8 தாளங்கள் வரை காணப்படும் 7 சூளாதி தாளங்கள் தவிர எட்டாவதாக ஜோம்பட தாளம் என்னும் தாளம் காணப் படுகிறது. இவற்றில் திருவமும் மட்யமும் எல்லா சூளாதிகளிலும் உபயோகப்படுத்தப்படும். எப்படியிருந்தாலும் தாளங்கள் அந்த வரிசைப்படியேசூளாதிகளில் உபயோகப்படுத்தப்படவில்லை. திரும்ப திருமப அதே தாளங்கள் வருவதும் உருப்படியின் தரத்தை குறைத்துவிடவில்லை


சூளாதி என்பது மிகவும் விரிவரன, கஷ்டமான உருவ்படி. அநேகமாக இதில் முக்கியமான ராக ஸந்சாரங்கள் அனைத்தும் வந்துவிடும். சூளாதிகளை ராக தாள மாலிகை என்றும் சொல்ல லாம், ஒவ்வொரு சீரும ஒவ்வொரு ராகத்திலுஸ் ஒவ்வொரு சூளாதி தாளத்திலும் அமைந்திருக்கும். புரந்தரதாஸரின் சிஷ்யரான விஜயதாஸர் அதனை ஒரே ராசுத்தில் அமைத்கார் ராகம் அமைப் பது தாளத்தினை போல அவ்வளவு கண்டிப்பாண வீதியல்ல. ஆனால் துளஜ·ஜி போன்ற வாக்கேயகாரர்கள் லக்ஷணத்திலுள்ள வைகளை ஆதாரபூர்வமாக விளக்க புரந்தரதாஸரின் சூளாதிகளி லிருந்து ப்ரயோகங்களை எடுத்து உரைப்பது ஆச்சரியமான விஷயம்.

சூளாதியைப் போன்று தாஸர்களின் உருப்படியில் கர்நாடகத்தின் பக்தி இசையில் குறிப்பிடத்தக்க அதிலும் புரந்த தாஸரின் மிகவும் சிறந்து விளங்கிய உருப்படிகளில் ஒன்று உகாபோசும். ஆனால் சூளாதியைப் போல் இல்லாமல் உக போசும் இசையின் லக்ஷணக்ரந்தங்களிலோ, அல்லது தாஸர் ஸாஹித்யங்களிலோ குறிப்பிடப்படவில்லை.


மத்யயுகத்து ப்ரபந்தங்களின், அங்கங்களான உத்ராஹம், ஆபோகம் இந்த 2 வார்தைகளின் உதக்ராபோகத் எதின் திரிபு உகா போகம் எனப்படுகிறது. உக், மற்றும் ஆபோகம் என்ற 2 வார்ததைகளிலிருந்து உகாபோகம் என்று கூறப்படுகிறது என்பது ஒரு சிலர் கருத்து. மனிதனின் அனுபவ எல்லைக்குள்.


வரும் எதுவும் ஆபோகம் என்றும் அதனை வார்த்தை யினால் வர்ணிப்பது உகாபோகமுமாகும். ஹரிதாஸர்கள் தங்க ளுடைய இஷ்ட தெய்வத்தை பாடும் பொழுது அவர்களின் உள்ளுணர்வின் எண்ணங்களும் அனுபவங்களும் இசை வடிவங் களாகவும் இலக்கியங்களாகவும் உருவெடுக்கும். இதுதான் உகாபோகத்தின் அடிப்படையாகும் ஆனால் உக போகத்தை வாழ்க்கையின் அனுபவங்களின் சாரம் என்று சொல் லலாம். பாவத்தை பொறுத்த வரையில் வாக்கேயகாரரின் அனுப வங்களும் எண்ணங்களும் வார்த்தையாக வருவதால் ஆழமாக இருக்கும். முக்கிய கரு சிறியதாகத் தான் இருக்கும் ஆனால் அது சமயம், பக்தி, நெய்வம், புகழ்ச்சி எல்லாவற்றையுச் கொண் டுள்ளது உருப்பு முழுவதும் உரைநடையாகத் தான் இருக்கும். எப்பொழுகாவதுதான் அதில் அலங்கார அணிகளையும் கவிதை நயத்தையும் காணமுடியும். இந்த விஷயத்திலும் மற்றும் சில அடிப்படை காரணங்களிலும் இது பஸவேசவரர் அக்கமகாதேவி ஆகியோரின் வசனங்களை ஒத்துள்ளது. ஆனால் வீர சைவர்களின் மூலமாகத்தான் புரந்தரதாஸரும் மற்ற தாஸர்களும் உகாபோகத் துக்கு வடிவம் கொடுத்தார் என்பது விவாதிக்கக் கூடிய விஷய மாகும். சூளாதியிலிருந்து உகாபோகம் வேறு படுவதன் முக்கிய காரணம் இது ஒரு அனிபத்த ப்ரபத்தமாகும். உகாபோகம் மிகவும் எளிமையான உருப்படியாகும் அதனுடைய பகுதிகள் இதுநான் என்று வரையுறுத்துக் கூறமுடியாது. இசை உருப்படி என்று சொல்லும் பொழுது இது கீதத்தைவிட எளிமையானது உகர போகத்திற்கு என்று தனியாக ராகமோ அல்லது சொல்லும் முறையோ கிடையாது. அது ஒரே ராகத்தில் தாளத்துடனோ, தாளம் இல்லாமலோ பாடப்படும். தாளம் இல்லாமல் பாடும் பொழுது அது வசனத்தை போல இருக்கும். (இது கன்னடத்தில் உள்ள ஸ்லோக வகையாகும்) தற்பொழுது சுச்சேரிகளில் உகர் போகத்தையும் பாடி தேவர் நாமாவை பாடுவது வழக்கமாக உள்ளது சுருக்கமாக உகாபோகம் என்பது இசை அமைத்து பாடும் முறை இல்லாமல் அதாவது முன் ஆயத்தமின்றி பாடப் படும் ஒரு தாஸ ஸாஹித்யமாகும். அதனுடைய தோற்றம் எப்படி இருந்தாலும் கர்நாடகத்தின் தனித்துவம் வாய்ந்த இசை உருப்படி களில் இதுவும் ஒன்று, புரந்தரதாஸர்களின் உகாபோகங்கள் அனைத்தும் ப்ரடலமானவை.


வழக்கமாக ஒரு வாக்கேயகாரர் கர்நாடக இசைக்கு ஆற்றிய தொண்டை வரையறுத்துக் கூறுவது இடல்பு ஸங்கீக பிதாமஹர் என்று பெருமையுடன் போற்றப்படும் புரந்தரதாஸரின் படைப்புகளை, வார்த்தைகளால் கூறி வர்ணிப்பது அஸசத்யம். அவருடைய வாரிசுகளாக இருக்க நாம் பெருமைப்படுகிறோம். ஆயிரக்கணக்கான உருப்படிகளை இயற்றி வாக்கேயகாரராகவும் லக்ஷணகாரராகவும் விளங்கும் புரந்தரதானரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. ஸம்ஸ்கிருசத்தில் வால்மீகி எவ்வாறோ அதேபோல் இவர் கர்நாடக இசைக்ரவார். கோடியில் ஒருவர் தான இம்மாதிரி தோன்றுவார் அத்தகைய பெருமையை உடை யவர் புரந்தரதாஸர்.

புரந்தரதாஸரின் க்ருதிகள் பாடம் செய்ய வீடியோ லிங்க்

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

Maharajapuram Santhanam - kaNDu kaNDu nIyenna - dvijAvanti - purandara dAsar

Maharajapuram Santhanam-Aparadhi Nanalla-Revathi-Purandaradasa

Maharajapuram Santhanam - Shirathi Kani - Ragamalika- Purandaradasa

Maharajapuram Santhanam-Govinda Ninna - Janasammodhini-Adi-Purandaradasa

Sandeep Bharadwaj, Maharajapuram S. Ramachandran, Narayana

Sri Vyasateertha Gurusarvabhoumara Aradhana Mahotsava 2020 Day 3 session 1

👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆

இந்த வலைப்பக்கத்தை உருவாக்கியவா் 

ஆ,சங்கரன் நாதஸ்வர ஆசிாியா்  SALEM.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சீர்காழி முத்துத்தாண்டவர்

*காருகுறிச்சி அருணாசலம்* அவர்களின் வாழ்க்கை வரலாறு