மரி மரி நின்னே-கீர்த்தனை-ஸ்வரம்-PDF File


மரிமரி நின்னே கீர்த்தனை
இராகம் - சாரமதி தாளம் - ஆதி 20 ல் ஜன்யம்

ஆ  - ஸ ாி க ம ப த நி ஸ்

அ - ஸ் நி த ம க ஸ

பல்லவி 

மரி மரி நின்னே மொர(லி)ட3 நீ                 மனஸுன த3ய ராது3


அனுபல்லவி

 கரி மொர வினி ஸரகு3ன சன நீகு    காரண(மே)மி ஸர்(வா)ந்தர்யாமி     (மரி)


சரணம்

கருணதோ த்4ருவுனி(கெ)து3ட நில்சின        கத2 வின்னா(ன)ய்ய

ஸுர ரிபு தனயுனிகை நர ம்ரு2க3மௌ       ஸூசன(லே)மய்ய

மரசி(யு)ன்ன வன சருனி ப்3ரோசின       மஹிம தெலுப(வ)ய்ய

த4ரனு வெலயு த்யாக3ராஜ ஸன்னுத     தரமு கா(தி3)க நே வின(ன)ய்ய    (மரி)

💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝


கீர்த்தனையின் விளக்கம்

பல்லவி

திரும்பத் திரும்ப உன்னையே முறையிட, உனது

மனதினில் தயை வாராது

                                                                      அனுபல்லவி

கரியின் முறையீட்டினைக் கேட்டு விரைந்து செல்ல உனக்குக்

காரணமென்ன, யாவரின் உள்ளியங்குவோனே?

திரும்பத் திரும்ப உன்னையே முறையிட, உனது

மனதினில் தயை வாராது

சரணம்

கருணையுடன் துருவனின் முன் நின்ற

கதை செவி மடுத்தேனய்யா!

வானோர் பகைவன் மைந்தனுக்கென நரசிங்கமாகிய

செய்தி யென்னவைய்யா?

(வாக்குறுதியினை) மறந்திருந்த வனத்துறைவோனைக் காத்த

மகிமையினைத் தெரிவியுமைய்யா;

புவியில் விளங்கும், தியாகராசனால் போற்றப் பெற்றோனே!

தரமன்று இனியும்; நான் கேளேனய்யா;

திரும்பத் திரும்ப உன்னையே முறையிட, உனது

மனதினில் தயை வாராது

💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝

இந்தத் கீர்த்தனையை  ஸ்வரத்துடன் வீடியோவில் பார்த்து பாடம் செய்யஇங்கே கிளிக் செய்யவும் 

👉 மரிமரி நின்னே கீர்த்தனை


💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝


இந்த கீர்த்தனையின்  PDF File வேண்டுமென்றால்

 இதை கிளிக் செய்யவும்

👉மரிமரி நின்னே கீர்த்தனை

💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சீர்காழி முத்துத்தாண்டவர்

*காருகுறிச்சி அருணாசலம்* அவர்களின் வாழ்க்கை வரலாறு

புரந்தர தாஸர்