இடுகைகள்

ஜூன், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

போ சம்போ ஸ்வரம் PDF & VIDEO BHO SAMBO SWARAM

படம்
  போ சம்போ ( கீர்த்தனை) இயற்றியவர் : தயானந்த சரஸ்வதி சுவாமிகள் ராகம் : ரேவதி 8ல் ஜன்யம்  தாளம் : ஆதி தாளம் ஆரோகணம் : ஸ ரி ம ப நி ஸ்  அவரோகணம் : ஸ் நி ப ம ரி ஸ  ஸ்வர ஸ்தானங்கள் : ஷட்ஜம்  சுத்த ரிஷபம்  சுத்த மத்யமம்  பஞ்சமம்  கைசிகி நிஷாதம்  பின்குறிப்பு :  பச்சை நிறத்தில்  உள்ள(  நி ) கீழ் ஸ்தாயி நிஷாதத்தைக் குறிக்கும். பின்குறிப்பு :  பச்சை நிறத்தில்  உள்ள(  ரி ) மேல் ஸ்தாயி ரிஷபத்தைக் குறிக்கும். பல்லவி   1) ஸா     ;      ;      நீ     ஸா    ;       ;      ரி  ஸ  /    போ                 சம்     போ                  சி  வ     நீ     ஸா   ,     ரி     ஸா    /     ரீ      ;    ;      ;      //    சம் போ      ஸ்வ யம்     போ              2) மா       ;      ;       ரீ       மா    ;       ;      ரி  ஸ  /    போ                     சம்   போ                 சி  வ    ரீ     மா   ,     ப      மா    /     பா      ;    ;      ;      //    சம் போ      ஸ்வ யம்     போ              3) நீ       ;       ;         பா       நீ    ;       ;       ப  ம  /    போ                     சம்     போ               சி

சதாசிவ பிரமேந்திரா் நிகழ்த்திய அற்புதங்கள்

படம்
  சதாசிவ பிரமேந்திரா் நிகழ்த்திய அற்புதங்கள் கொடுமுடியில் நிகழ்த்திய அதிசயம் சரீரம் மண்ணிலே புதைந்து போகுதல் கொடுமுடிக்குப் பக்கத்திலே அகத்தியா் பாறை என்ற ஒரு இடம் உள்ளது.  காவேரிக்கு நடு மையத்திலே ஒரு பெரும் பாறை. அதைச் சுற்றிக் கொண்டு தண்ணீர் ஓடுகிறது.  பல சமயங்களில் அந்தப் பாறையின் மீது சதாசிவ பிரம்மம் உட்கார்ந்து கொள்வார்.  எங்கே போய் தவம் செய்தாலும் வயது வந்தவர்கள், விவேகம் உள்ளவர்கள் உபத்திரவம் கொடுக்கமாட்டார்கள்.  ஆனால் குழந்தைகள் அறியாமல் உபத்திரவம் கொடுத்துவிடுவார்கள். சின்னக் குழந்தைகள் தண்ணீரில் வர முடியாதல்லவா?  பத்து நாட்கள் வரை கூட இவர் அந்தப் பாறையிலேயே உட்கார்ந்து விடுவார்.  அப்படிப் பாறை மீது உட்கார்ந்திருந்த ஒரு தினத்திலே காவேரி பெருக்கெடுத்து இவரை உருட்டிக்கொண்டு சென்று மண்ணிலே புதைத்து விட்டது.  சரீரம் மண்ணிலே புதைந்து போய்விட்டது. சில தினங்களில் தண்ணீர் வற்றியது.  சதாசிவ பிரம்மத்தை அப்பகுதியில் காணாத மக்கள் பல இடங்களிலும் தேடிப்பார்த்து ஓய்ந்தனர். ஆறு மாதங்களோ அல்லது ஆறு வருடங்களோ ஓடி மறைந்தன. கட்டிடம் கட்ட மணல் வேண்டி கொடுமுடியிலிருந்து வண்டிகள் வந்தன.  ஒரு இடத்தி

நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் வாழ்க்கை வரலாறு

படம்
சதாசிவ பிரம்மேந்திரர் வாழ்க்கை வரலாறு சுமார் 350 ஆண்டுகட்கு முன்பு மதுரை மாநகரிலே சோமநாத யோகி, பார்வதி தேவி என்று தெலுங்கர் குலத்தில் பிறந்த இரண்டு தம்பதிகள் இல்வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தார்கள். சோமநாத யோகியரது தாய் தந்தையர் யார் என எந்த சரித்திரத்திலேயும் எழுதப்படவில்லை. ஆகவே சோமநாத யோகி அவர்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்வோம். பிரம்மேந்திராளுடைய தகப்பனார் சோமநாத யோகி. தாயார் பார்வதி தேவி. அவருக்கு யோகிப் பட்டம் இளமைப் பருவத்திலேயே வந்துவிட்டது. அந்த யோக மகிமையினாலே நீண்ட காலம் இந்த உடலோடு வாழலாம் என்று நினைத்துக் கொண்டு குண்டலினி யோகத்தை அப்யசித்தார். பிராணபந்தம் செய்யும் முறையைக் குண்டலினி யோகம் என்பர். அதிலே வெற்றியும் பெற்றார். பிரம்மச்சரிய விரதம் அனுஷ்டித்தால்தான் குண்டலினி யோகம் நல்ல முறையிலே பலன்தரும். அநிமா, மகிமா, கரிமா, லகிமா, பிராப்தி, பிரகாமியம், ஈசத்வம், வசித்வம் என்று சொல்லப்பட்ட அஷ்ட சித்திகளும் கைகூடும் என்று சாஸ்த்திரங்களிலே சொல்லப்பட்டுள்ளது. அதை அனுபவித்தே ஆகவேண்டுமென்ற எண்ணத்திலே பிரம்மச்சரிய விரதத்தைக் கைக்கொண்டு சோமநாத யோகி யோகத்தைப் பயின்று வந்தார். சோமநாத யோகியின

புரந்தர தாஸர்

படம்
  புரந்தர தாஸர் வாழ்க்கை வரலாறு நமது இந்திய வாழ்க்கையின் முக்கிய அம்சமே பக்தி தான். பக்தி மார்கத்தில் மூழ்கியிருந்த மஹான்கள் ஆசார்யர்கள் போன்றவர்கள் இந்தியா முழுவதும் பரவியிருந்து நமது பக்தி மார்கத்தின் உயர்ந்த நோக்கத்தை ஒவ்வொரு காலகட்டத்தில் வெளிப்படுத்தும் சாட்சிகளாக இருந்து நமது ஸமூகத்திற்கே ஒரு புகழ்மிக்க வடிவத்தைக் கொடுத்தனர். 8 ம் நூற்றாண்டிலிருந்து தென்னிந்தியாவில் சைவர்கள். வீர சைவர்கள், வைஷ்ணவர்கள் போன்ற தெய்வீக மஹான்கள் இருந்திருக்கின்றார்கள். கர்நாடகத்தை சேர்ந்த ஹரிதாஸர்கள் என்பவர்கள் பரம்பரையாய் உள்ள ஸந்நியாஸிகளையும் ஆண்டிகளையும் போன்ற ஒரு வகை துறவிகளாவார். இவர்கள் இந்தியாவின் புராணக்கதை, கட்டுக்கதைகள் ஆரம்பித்த காலத்திலிருந்தே ப்ரபலமானவர்கள். " ஹரிதாஸர் " என்பது இரண்டு சொற்களின் கூட்டாகும். ஹரி, தாஸர் என்னும் 2 வார்த்தைகள் இதில் அடங்கி யுள்ளது. இதனுடைய அர்த்தம் "ஹரி என்னும் கடவுளின் நாஸர்" என்பதாகும். " தாஸர்" என்னும் வார்த்தையை திருப்பி படிக்கும் பொழுது "ஸ்தா என்னும் வார்த்தை வருகிறது. இதற்கு "எப்போதும் கடவுளுக்கு ஸேவகம் செய்பவர் &#